கடக்நாத் கோழி வளர்ப்பில் நிறைந்த வருமானம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் கடக்நாத் கோழி வளர்ப்பை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார். இவரைப் பற்றியும், இவருடைய கடக்நாத் கோழி வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

கடக்நாத் கோழி வளர்ப்பின் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் கடக்நாத் கோழி வளர்ப்பைப் செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவருடைய தந்தை இவர் சிறுவயதில் இருக்கும் போதிலிருந்தே கோழி பண்ணையை வைத்து வளர்த்து வந்ததாகவும் அதை பார்த்து வளர்ந்த இவருக்கும் நாமும் கோழி வளர்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றியதாக கூறுகிறார்.

இவர் சிவில் இன்ஜினியராக வேலை பார்த்து வருவதாகவும், கோழி வளர்ப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு கோழி பண்ணையை தொடங்கி இப்பொழுது சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் மக்களுக்கு தரமான கோழிகளை குறைந்த விலையில் அளிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடனும் இவர் கோழி வளர்ப்பை தொடங்கியதாகவும் கூறுகிறார்.

இந்தக் கோழி வளர்ப்பின் மூலம் இவருக்கு நிறைந்த அளவு வருமானம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

Specialties of kataknath chicken

கடக்நாத் கோழிகளின் பிறப்பிடம் மத்திய பிரதேசம் எனவும், இந்தக் கோழி வகைகளை இந்தியாவில் சிறப்பாக வளர்க்க முடியும் எனவும் ஆனால் முதலில் அதிக அளவில் கடக்நாத் கோழிகள் இருந்தது மத்திய பிரதேசத்தில் எனக் கூறுகிறார்.

மேலும் கடக்நாத் கோழிகளில் அதிக அளவு மருத்துவ குணம் இருப்பதாகவும், இந்தக் கோழியின் இறைச்சியை நாம் எடுத்துக் கொண்டால் இருதய நோய்கள் குணமாகி விடும் எனவும் கூறுகிறார்.

இந்த கடக்நாத் கோழிகள் அதிக அளவு மருத்துவ குணம் உள்ளதால் அதிக வாடிக்கையாளர்கள் கடக்நாத் கோழிகளைக் விரும்பி உண்பதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த கடக்நாத் கோழி இறைச்சியை பெண்கள் எடுத்துக் கொண்டால் மாதவிடாய் கோளாறுகள் சரியாகிவிடும் எனவும், கடக்நாத் கோழி முட்டைகள் கருப்பு நிறத்தில் இருக்கும் எனவும் கூறுகிறார்.

கடக்நாத் கோழிகள் முற்றிலுமே கருப்பு நிறத்தில் இருக்கும் எனவும், இதனுடைய தோல் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கும் எனவும் அவ்வாறு தோலானது கருப்பு நிறத்தில் இல்லை என்றால் அந்த கோழி தூய்மையான கடக்நாத் கோழி இல்லை எனவும் கூறுகிறார்.

மேலும் கடக்நாத் கோழி இறைச்சியை அனைவரும் உண்ண முடியும் எனவும், நாட்டுக்கோழியை சர்க்கரை மற்றும் இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் உண்ண முடியாது எனவும் ஆனால் சர்க்கரை மற்றும் இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் கடக்நாத் கோழி இறைச்சியை உண்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறுகிறார்.

கடக்நாத் கோழியின் வளர்ப்பு முறை

கடக்நாத் கோழிகளைக் மிகச் சிறப்பான முறையில் இவர் வளர்த்து வருவதாகவும், கடக்நாத் கோழிகள் உடன் சேர்த்து இவர் வான்கோழி, நாட்டுக்கோழி மற்றும் கின்னிக்கோழி அகிய கோழி வகைகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

ஆனால் இதில் இவர் அதிகமாக கடக்நாத் கோழிகளைக் மட்டுமே அதிக அளவில் வளர்ந்து வருவதாகவும், ஏனெனில் இவருடைய பகுதியில் கடக்நாத் கோழிகளுக்கு அதிகளவு வரவேற்பு இருப்பதாக கூறுகிறார்.

மேலும் கடக்நாத் கோழி வளர்ப்பை சிறப்பான முறையில் வரவைப்பதற்கு அதிக கஷ்டத்தை மேற்கொண்டதாகவும், இவ்வாறு கஷ்டப்பட்டால்தான் நல்ல நிலைக்கு வரமுடியும் எனவும் கூறுகிறார்.

கடக்நாத் கோழிகள் சிறப்பாக வளர்வதற்கு கொட்டகையை மிகப்பெரிய அளவில் அமைத்து அந்தக் கொட்டகையில் கோழிகளை விட்டு வளர்த்து வருவதாகவும், கொட்டகையில் கோழிகள் காற்றோட்டமாக சிறப்பான முறையில் வளர்ந்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் நல்ல தரமான ஆண் மற்றும் பெண் கோழிகளை வைத்து இவர் இனப்பெருக்கம் செய்து கோழி குஞ்சுகளை உற்பத்தி செய்வதாகவும், பிறக்கும் குஞ்சுகள் தரமான முறையில் பிறக்க வேண்டும் என்றால் 6 மாதங்களுக்கு ஒருமுறை முட்டையிடும் கோழியை மாற்றிவிட வேண்டும் என கூறுகிறார்.

கடக்நாத் கோழிகள் ஒரு வருடத்திற்கு 240 முட்டைகளை அளிப்பதாகவும், சரியான முறையில் தீவனத்தை அளித்து பராமரித்து வந்தால் மட்டுமே கோழிகள் முட்டைகளை இந்த அளவிற்கு அளிக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் கடக்நாத் கோழிகளின் முட்டையை இன்குபேட்டரில் வைப்பதற்கு முன்பு முட்டையை சுத்தமாக எந்த அழுக்கும் இல்லாமல் சுத்தம் செய்து வைக்க வேண்டும் எனவும் இல்லையெனில் முட்டையில் குஞ்சு பொரிக்காது எனவும் கூறுகிறார்.

Fodder and protection system

பிறந்த குஞ்சுகளுக்கு எந்தவித நோய்களும் தாக்காமல் இருப்பதற்கு மூன்றுவித நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை இவர் அளிப்பதாகவும், அவைகள் F11,IPD,S1 ஆகிய மருந்துகளை அளிப்பதாக கூறுகிறார்.

பிறந்த ஏழு நாள் ஆன குஞ்சுகளுக்கு குஞ்சுகளின் கண்ணில் மருந்தினை அளிப்பதாகவும் மற்றும் 14 நாள் ஆன கோழி குஞ்சுகளுக்கு பாலில் மருந்தினை கலந்து வைப்பதாகவும், 25லிருந்து இருபத்தி எட்டு நாட்கள் ஆன கோழி குஞ்சுகளுக்கு ஒருமுறை மருந்தினை அளிப்பதாகவும் கூறுகிறார்.

இந்த மூன்று மருந்துகளையும் சரியாக அளிக்க வேண்டும் எனவும், அனைத்து கோழிகளுக்கும் அம்மை தடுப்பூசி நோயை நிச்சயமாக போட வேண்டும் எனவும் இல்லையெனில் கோழிகளுக்கு அம்மை நோய் ஏற்பட்டு இறந்து விடும் எனக் கூறுகிறார்.

மேலும் கோழிகளுக்கு இரத்தக்கழிச்சல் வெள்ளைக் கழிச்சல் ஆகிய no ஏற்படும் எனவும் அதனை மருந்தினை கொடுத்து சரி செய்து கொள்ளலாம்  எனவும் மற்றும் கோழிகளின் கொட்டகையை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்துவிட வேண்டும் எனவும் கூறுகிறார்.

ஒருநாள் குஞ்சுகளுக்கு பிரீ ஸ்டார்ட்டர் எனப்படும் தீவனத்தைப் அளிப்பதாகவும் மற்றும் பிறந்து 15 நாட்களுக்கு மேல் ஆன குஞ்சுகளுக்கு ஸ்டாட்டர் எனப்படும் கம்பெனி தீவனத்தை அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

மற்றும் நன்கு வளர்ச்சியடைந்த கோழிகளுக்கு அளிக்கக்கூடிய தீவனம் கடைகளில் விற்பனையாகும் எனவும் அந்தத் தீவனத்தை அளித்து வளர்த்து வந்தால் கோழிகள் சிறப்பான முறையில் விரைவில் வளரும் எனவும் கூறுகிறார்.

மேலும் இயற்கையில் விளைந்த அகத்தி,முருங்கை,வேலி மசாலா போன்ற கீரை வகைகளை கோழிகளுக்கு அளிக்கலாம் எனவும், கீரை வகைகளை கோழிகள் அதிக அளவில் விரும்பி உண்ணும் எனவும் கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

கடக்நாத் கோழி வளர்ப்பில் அனைத்து விதங்களிலும் லாபம் இருப்பதாகவும் எந்த விதத்திலும் இந்த கோழி வளர்ப்பில் நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறுகிறார்.

கோழிகளை வெளியில் இருந்து அதிகளவு வாடிக்கையாளர்கள் வந்து எடுத்துச் செல்வதாகவும் மற்றும் இவருடைய ஊரில் உள்ளவர்களும் கடக்நாத் கோழிகளைக் இறைச்சிக்காக அதிகளவில் வாங்கி செல்வதாகவும் கூறுகிறார்.

ஒருநாள் கோழிக்குஞ்சை 16 ரூபாய் என்ற விலைக்கு இவர் விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் ஒரு மாதம் ஆன கோழிக்குஞ்சுகளையும் மற்றும் பெரிய கோழிகளையும் இவர் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

கடக்நாத் கோழி முட்டை பத்து ரூபாயிலிருந்து 40 ரூபாய் வரை விற்பனையாகும் எனவும் மற்றும் கோழியின் இறைச்சியின் விற்பனையின் மூலமும் இவர் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

கடக்நாத் கோழி வளர்ப்பை இவர் மிகச் சிறப்பான முறையில் செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

மேலும் படிக்க:நாட்டுக்கோழி வளர்ப்பில் அதிக வருமானம்.

Leave a Reply