எலுமிச்சை சாகுபடியில் நிறைந்த வருமானம்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் ஒட்டு ரக எலுமிச்சை சாகுபடியை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார். இவரைப் பற்றியும், இவருடைய எலுமிச்சை சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

எலுமிச்சை சாகுபடியின் தொடக்கம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் ஒட்டு ரக எலுமிச்சை சாகுபடியை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவர் இவருடைய சிறு வயதிலிருந்தே விவசாயம் செய்வதை பார்த்து வளர்ந்ததாகவும் இவருடைய குடும்பம் விவசாயக் குடும்பம் என்பதாலும் இவருக்கும் விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு விவசாயத்தை செய்ய தொடங்கியதாக கூறுகிறார்.

இவ்வாறு இவர் விவசாயத்தை தொடங்கியதற்கு பிறகு எலுமிச்சை சாகுபடி செய்யலாம் என்று ஆர்வத்தின் மூலம் எலுமிச்சை சாகுபடியை தொடங்கி இப்பொழுது அதை சிறப்பான முறையில் சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் ஒட்டு ரக எலுமிச்சை சாகுபடியை செய்து வருவதாகவும் இந்த ஒட்டு ரக எலுமிச்சை மிக சிறப்பாக வளர்ந்து அதிக அளவு விளைச்சலை தருவதாகவும் இதன் மூலம் இவர் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

Method of cultivation of lemon

எலுமிச்சை சாகுபடியை இவர் மிக சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், எலுமிச்சை சாகுபடியை இவர் நான்கு ஏக்கர் நிலத்தில் மிக சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.

இந்த நான்கு ஏக்கர் நிலத்தில் இவர் இப்பொழுது 600 எலுமிச்சை செடிகளை சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும், மேலும் இவர் ஒட்டு ரக எலுமிச்சை சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.

ஆரம்பத்தில் இவர் இந்த ஒட்டு ரக எலுமிச்சை செடிகளை வெளியில் இருந்து வாங்கி வந்து நட்டு வளர்த்ததாகவும் இப்பொழுது இவரே செடியிலிருந்து ஒட்டு உற்பத்தி செய்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

செடியினை நடுவதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது அதில் இயற்கை உரங்களைப் போட்டு பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் இவ்வாறு நிலத்தை நன்றாக பதப்படுத்தி வைத்துக் கொண்ட பிறகு செடிகளை நட வேண்டும் என கூறுகிறார்.

இவ்வாறு செடி நட்ட பிறகு அதற்கு நன்றாக இயற்கை உரமான மாட்டுச் சாணம் மற்றும் ஆட்டு புழுக்கை ஆகியவற்றை அளிக்க வேண்டும் எனவும் இவ்வாறு மிகுந்த பராமரிப்புடன் வளர்த்தால் மிகச் சிறப்பான முறையில் செடி வளர்ந்து நல்ல விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.

ஒட்டுரக எலுமிச்சையின் சிறப்புகள்

நாட்டு ரக எலுமிச்சையை விட ஒட்டு ரக எலுமிச்சை மிக விரைவாக வளர்ந்து அதிகளவில் விளைச்சலை அளிக்கும் எனவும் இதன் மூலம் நிறைந்த லாபம் நமக்குக் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

நாட்டு ரகம் வளர்ந்து காய்களை தருவதற்கு நான்கிலிருந்து ஐந்து வருடங்கள் ஆகும் எனவும் ஆனால் ஒட்டு ரகம் வளர்ந்து காய்களை தருவதற்கு இரண்டு வருடம் மட்டுமே எடுத்துக் கொள்ளும் எனக் கூறுகிறார்.

இவ்வாறு இரண்டு வருடத்தில் காய் காய்க்க தொடங்கும் செடியானது தொடர்ந்து அதிகளவில் காய்களை அளிக்கும் எனவும்,இந்த ஒட்டுரக எலுமிச்சை செடியானது நல்ல விளைச்சலை அளிக்கும் எனக் கூறுகிறார்.

எந்த அளவிற்கு செடிகளை பராமரித்துக் கொண்டு வருகிறோமோ அந்த அளவிற்கு செடிகள் நல்ல வளர்ச்சியை பெற்று அதிகளவில் காய்களை அளிக்கும் என கூறுகிறார்.

நாட்டு ரக எலுமிச்சை செடியின் ஆயுட்காலமும் ஒட்டுரக எலுமிச்சை செடியின் ஆயுட்காலமும் ஒரே அளவு இருக்கும் எனவும் ஆனால் இந்த ஒட்டு ரக எலுமிச்சை செடியில் அதிகளவு காய்கள் காய்த்து நல்ல விளைச்சலை அளிக்கும் எனவும் கூறுகிறார்.

Water supply system and  maintenance system

ஒட்டு ரக எலுமிச்சை செடிகளுக்கு அதிகளவில் நீரினை அளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும், செடி பெரியதாக வளரும் வரை மட்டும் நீரினை வாரத்திற்கு ஒரு முறை அளிக்கலாம் எனவும் செடி நன்றாக வளர்ந்த பிறகு செடிகளுக்கு நீரினை அதிகளவில் அளிக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறுகிறார்.

செடி நன்றாக வளர்ந்த பிறகு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அல்லது நீர் அதிகமாக இருந்தால் வாரத்திற்கு ஒரு முறை அளிக்கலாம் எனவும் மற்றும் மழை பெய்யும் போது செடிகளுக்கு நீர் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் செடிகளை மிகுந்த பராமரிப்புடன் கவனித்துக் கொள்ள வேண்டுமெனவும் விலங்குகள் மற்றும் பறவைகளிடமிருந்து செடிகளை பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

இவருடைய பகுதியில் காட்டு பன்றிகள் மற்றும் எருமைகள் ஆகியவை இவருடைய தோட்டத்திற்குள் வந்து செடிகளை நாசம் செய்யும் எனவும் எனவே அதனைத் தடுப்பதற்கு இவர் கம்பி வேலியை அமைத்து இருப்பதாகவும் கூறுகிறார்.

செடிகளுக்கு நீரினை அளிப்பதற்கு இவர் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருவதாகவும் இந்த முறையில் நீரினை அளித்தால் குறைந்த அளவில் நீர் செலவாகும் எனவும் மற்றும் செடிகளுக்கு நல்ல முறையில் நீர் சென்றடையும் எனவும் கூறுகிறார்.

மேலும் செடிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் எனவும் செடியில் புழுக்கள் உருவாகும் எனவும் அதனை தடுப்பதற்கு இவர் மருந்துகளை வாங்கி செடிகளுக்கு அளித்து பராமரித்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவ்வாறு செடிகளுக்கு ஏற்படும் நோய்களைத் தடுத்து செடிகளை மிகுந்த பராமரிப்புடன் பராமரித்து வளர்த்து வந்தால் நல்ல சிறப்பான முறையில் செடிகள் வளர்ந்து நல்ல விளைச்சலைத் தரும் எனவும் இதனால் அதிகளவு லாபம் நமக்கு கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

அறுவடை செய்யும் முறை

செடிகள் நன்றாக வளர்ந்து இரண்டாவது வருடத்தில் இருந்து அறுவடையை எடுக்க ஆரம்பம் செய்து விடலாம் எனவும் ஒரு வருடத்தில் இரண்டு முறை ஒரு செடியில் இருந்து அறுவடை எடுக்க முடியும் எனவும் கூறுகிறார்.

இரண்டு வருடம் ஆன செடியிலிருந்து பத்திலிருந்து 25 கிலோ வரை காய்களை அறுவடை செய்ய முடியும் எனவும் மற்றும் மூன்றிலிருந்து நான்கு வருடம் வளர்ந்த செடியில் இருந்து ஒரு வருடத்திற்கு 70 ல் இருந்து  80 கிலோ அளவு வரை காய்கள் காய்க்கும் எனவும் கூறுகிறார்.

இந்த முறை எலுமிச்சை சாகுபடியில் நல்ல லாபம் கிடைக்கும் எனவும், அனைவரும் இந்த எலுமிச்சை சாகுபடியை சுலபமாக செய்ய முடியும் என கூறுகிறார்.

Sales method and profit

எலுமிச்சையை அறுவடை செய்து இவர் இவருடைய ஊரில் உள்ள சந்தைகளில் விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் குறைந்த அளவில் கேட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு இவர் எலுமிச்சையை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

இயற்கையான முறையில் இவர் எலுமிச்சை சாகுபடி செய்து வருவதால் அதிகளவு வாடிக்கையாளர் இவரிடம் வந்து எலுமிச்சையை வாங்கி செல்வதாகவும் இதன் மூலம் இவர் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் இவர் மிகவும் சிறப்பான முறையில் ஒட்டு ரக எலுமிச்சை சாகுபடியை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க:இயற்கை முறையில் சிறப்பான உயிர்வேலி.

Leave a Reply