அரளி பூ சாகுபடியில் நிறைந்த வருமானம்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் அரளி பூ சாகுபடியை மிக சிறப்பான முறையில் செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார். இவரைப் பற்றியும், இவருடைய அரளிப் பூ சாகுபடி முறையை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.




அரளி பூ சாகுபடியின் தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் அரளி பூ சாகுபடியை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவருடைய குடும்பம் விவசாயக் குடும்பம் எனவும், இவருடைய நிலத்தில் நெல், வெங்காயம் மற்றும் சம்பங்கி ஆகியவற்றை விவசாயம் செய்து வந்ததாகவும் இதற்கெல்லாம் அதிகளவில் நீர் தேவைப்படும் எனவும் கூறுகிறார்.

இவைகளை எல்லாம் விவசாயம் செய்வதற்கு அதிக அளவில் நீர் தேவைப்பட்ட நிலையில் இவருடைய கிணற்றில் குறைந்த அளவே நீர் இருந்ததாகவும், இதன் காரணமாக நீரை குறைவாகப் பயன்படுத்தி சாகுபடி செய்யும் அரளிப் பூ சாகுபடி செய்யலாம் என்ற எண்ணத்தில் இவர் அரளி பூ சாகுபடியை தொடங்கியதாக கூறுகிறார்.

மற்றும் இவருடைய தந்தை ஒரு பூ வியாபாரி என்பதுதாலும் பூக்களின் விலையைப் பற்றி இவருடைய தந்தைக்கு அதிக அளவில் தெரியும் என்பதாலும் அரளிப்பூவை சாகுபடி செய்து அதனை விற்பனை செய்தால் அதிக அளவில் லாபம் கிடைக்கும் என்பதற்காக வெள்ளை அரளி சாகுபடியை தொடங்கியதாக கூறுகிறார்.

இவ்வாறு வெள்ளை அரளி சாகுபடியை தொடங்கி இப்பொழுது மிக சிறப்பான முறையில் அரளி சாகுபடியை செய்து அதன் மூலம் இப்பொழுது நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.




Method of cultivation of Oleander

வெள்ளை அரளி பூ சாகுபடி செய்வதற்கு செடிகளை நிலக்கோட்டையில் உள்ள கல்லுப்பட்டி என்னும் கிராமத்தில் இருந்து எடுத்து வந்து அதன் தண்டுகளை வெட்டி எடுத்து நட்டு வளர்க்க தொடங்கியதாக கூறுகிறார்.

இவ்வாறு அரளி தண்டினை நட்ட ஆறாவது மாதத்திலேயே நன்கு வளர்ந்து பூக்களைக் கொடுக்க தொடங்கி விட்டதாகவும், இந்த அரளிப் பூ சாகுபடியை செய்வதற்கு அதிக அளவில் பணம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் இதன் மூலம் நமக்கு லாபம் மட்டுமே அதிக அளவில் கிடைக்கும் என கூறுகிறார்.

அரளிச் செடிகளை நடுவதற்கு முன்பு மண்ணை நன்றாக உழுது பதப்படுத்தி வைத்துக் கொண்டு அதில் இயற்கை உரமான மாட்டு சாணம் ஆகியவற்றை போட்டு மண்ணை நன்றாக பதப்படுத்தி வைத்துக் கொள்வதாக கூறுகிறார்.

இவ்வாறு மண்ணை நன்றாக பதப்படுத்தி வைத்த பிறகு தண்டுகளை நட்டு அதன் மீது உரத்தினை போட்டு வளர்த்து வந்தால் செடிகள் சிறப்பாக வளர்ந்து கொண்டு வரும் என கூறுகிறார்.

மேலும் இந்த அரளி செடிகளில் பராமரிப்பு அளவு அதிகளவில் இருக்காது எனவும், குறைந்த வேலையிலும் குறைந்த செலவிலும் நமக்கு அதிக வருமானம் இந்த அரளி சாகுபடியின் மூலம் கிடைக்கும் என கூறுகிறார்.

அனைத்து மண் வகைகளிலும் இந்த அரளிப் பூ செடிகளை சிறப்பாக விவசாயம் செய்ய முடியும் எனவும், இரண்டு அடி அளவு குழி தோண்டி அரளி தண்டினை நட வேண்டும் என கூறுகிறார்.

இப்பொழுது இவர் இந்த அரளி சாகுபடியை 35 சென்ட் பரப்பளவில் மிக சிறப்பான முறையில் செய்து வருவதாகக் கூறுகிறார்.




அரளி பூக்களின் வகைகள்

அரளிப் பூக்களில் பல வகைகள் இருப்பதாகவும் அதில், வெள்ளை அரளி, வெளிர் சிவப்பு நிற அரளி மற்றும் சிவப்பு நிற அரளி, அடுக்கு அரளி, தங்க அரளி என பலவகை அரளிப் பூக்கள் இருப்பதாகவும் கூறுகிறார்.

இதில் இவர் வெள்ளை அரளி பூக்களையும் மற்றும் வெளிர் சிவப்பு நிற அரளி பூக்களையும் சாகுபடி செய்து வருவதாகவும் இந்த அரளிப் பூக்கள் சந்தைகளில் அதிக அளவில் விற்பனையாகும் எனவும் கூறுகிறார்.

இந்த அரளிப் பூக்கள் அதிகளவு சாமிக்கு பூஜை செய்வதற்கு பயன்படும் எனவும் மற்றும் மாலைகளில் இந்த பூக்களை வைத்து கட்டுவார்கள் எனவும் கூறுகிறார்.

அதிக அளவில் இந்த பூக்களை கோவிலில் பூஜை செய்வதற்கு பயன்படுத்தகின்றனர் எனவும், இவ்வாறு கோவிலில் பூசை செய்யும் பூசாரிகளே இந்த பூக்களை அதிக அளவில் வாங்கி செல்வதாகவும் கூறுகிறார்.

Harvesting method

அரளிப் பூக்கள் தண்டினை நட்ட ஆறாவது மாதத்திலேயே பூக்கள் பூக்க ஆரம்பம் செய்து விடும் எனவும், இவ்வாறு பூ பூக்க ஆரம்பம் செய்த நாட்களிலிருந்து அரளி பூக்களை நாம் அறுவடை செய்ய தொடங்கி விடலாம் என கூறுகிறார்.

மேலும் அரளிப் பூக்கள் அனைத்து பருவ நிலைகளிலும் பூக்களை தரும் எனவும், இவ்வாறு அனைத்து பருவத்திலும் இந்த அரளிப் பூக்கள் பூக்களை தருவதினால் இதன் மூலம் நமக்கு நிறைந்த லாபம் கிடைக்கும் என கூறுகிறார்.

அரளிப் பூக்கள் நன்கு பெரிதாக பூத்த பிறகு மாலை நேரத்தில் பூக்களை பறிக்க வேண்டும் எனவும், ஏனெனில் பூக்கள் மொக்குகளாக இருக்கும் போது பறித்தால் தான் வாடிக்கையாளர்கள் அதனை விரும்பி வாங்குவார்கள் என கூறுகிறார்.

மேலும் அரளிப் பூக்கள் மொட்டுகளாக இருக்கும் போது மட்டுமே அதிக விலைக்கு விற்பனையாகும் எனவும், மொட்டுகள் விரிந்து விட்டால் பூக்கள் அதிகளவில் விற்பனை ஆகாது எனவும் கூறுகிறார்.

மேலும் அரளி செடியை நட்ட பிறகு இரண்டு நாளைக்கு மட்டும் தொடர்ந்து நீரினை அளிக்க வேண்டும் எனவும் அதன் பிறகு இந்தச் செடிகளுக்கு அதிகளவு நீரினை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அல்லது வாரத்திற்கு ஒரு முறை மட்டும் நீரினை அளித்தால் போதுமானது எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த அரளிச் செடிகள் நீர் இல்லாமல் இறந்து விட்டால் மீண்டும் மழை பெய்யும் போது செடியானது தழைந்து நன்றாக வளரும் எனவும் கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

அரளி பூக்களை இவர் அறுவடை செய்து இவரின் ஊரில் உள்ள சந்தைகளில் கொண்டு விற்பனை செய்து வருவதாகவும், அரளிப் பூக்கள் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விலையில் விற்பனையாகும் எனவும் கூறுகிறார்.

இவர் சாகுபடி செய்துள்ள 35 சென்ட் நிலத்தில் இருந்து ஒருநாளைக்கு பத்திலிருந்து பதினைந்து கிலோ விளைச்சலை எடுப்பதாகவும், இவ்வாறு பத்திலிருந்து பதினைந்து கிலோ விளைச்சல் எடுக்கும் போது சந்தைகளில் பூவின் விலை குறைந்த அளவிலேயே விற்பனையாகும் எனவும் கூறுகிறார்.

மற்றும் சில சமயங்களில் ஒரு நாளைக்கு ஐந்தில் இருந்து ஆறு கிலோ மட்டுமே பூக்களை எடுப்பதாகவும் இவ்வாறு 5லிருந்து 6 கிலோ வரை பூக்களை எடுக்கும் போது சந்தைகளில் அதிக அளவு விலைக்கு பூக்கள் விற்பனை ஆகும் எனவும் கூறுகிறார்.

அரளிப் பூ சாகுபடியில் இவர் ஒரு வருடத்தில் ஐந்திலிருந்து ஆறு லட்சம் ரூபாய் வரை வருமானத்தை பெற்று வருவதாகவும், அரளிப்பூ சாகுபடியில் நிறைந்த வருமானம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் இந்த அரளி பூ சாகுபடியை மிகச் சிறப்பான முறையில் செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

மேலும் படிக்க:தரமான ஆட்டோமேட்டிக் இன்குபேட்டர் தயாரிப்பு.

 




(U)

Leave a Reply