மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் காடை வளர்ப்பினை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார். இவரைப் பற்றியும் இவருடைய காடை வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
காடை வளர்ப்பின் தொடக்கம்
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் காடை வளர்ப்பினை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவர் இவரது பட்டப் படிப்பினை முடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்து கொண்டிருந்ததாகக் கூறுகிறார்.
இவ்வாறு இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பது இவருக்கு சற்று கடினமாக இருந்ததாகவும் இந்த வேளையில் இவருக்கு ஆர்வம் அதிகமாக இல்லை எனவும் கூறுகிறார்.
இதன் காரணமாக இவர் தனியார் நிறுவனத்தின் வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊருக்கே திரும்பி வந்து விட்டதாக கூறுகிறார்.
இவ்வாறு சொந்த ஊருக்குத் திரும்பி வந்த பிறகு சுயமாக ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இவர் காடை வளர்ப்பை தொடங்கியதாக கூறுகிறார்.
காடை வளர்ப்பில் இவருக்கு அதிக அளவு ஆர்வம் இருந்தாலும் இந்த காடை வளர்ப்பில் நிறைந்த வருமானம் கிடைக்கும் என்பதாலும் இவர் இந்த காடை வளர்ப்பை தொடங்கி மிக சிறப்பான முறையில் நடத்தி வருவதாக கூறுகிறார்.
மேலும் இவருக்கு இப்பொழுது இந்த காடை வளர்ப்பில் நிறைந்த வருமானம் கிடைத்து வருவதாகவும், காடை வளர்ப்பை இவர் விரும்பி நடத்தி வருவதாக கூறுகிறார்.
Quail rearing method
காடை வளர்ப்பை இவர் மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும், காடைகளுக்கு தேவையான உணவுகளை தரமானதாக அளித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
காடை வளர்ப்பில் மொத்தமாக இரண்டு வகைகள் இருப்பதாகவும், அவை ஜப்பானிய காடை மற்றும் நாட்டுக் காடை எனக் கூறுகிறார்.
இதில் இவர் ஜப்பானிய காடைகளை வளர்த்து வருவதாகவும், ஏனெனில் நாட்டுக் காடைகளை வளர்ப்பதற்கு அரசாங்கம் தடை விதித்து உள்ளதாகவும், இந்த நாட்டு காடைகளை நாம் வளர்க்க முடியாது எனவும் ஏனெனில் இந்த காடைகள் அதிகமாக பறக்கும் தன்மை உடையது எனக் கூறுகிறார்.
காடை வளர்ப்பை இவர் கடந்த ஐந்து வருடங்களாக நடத்தி வருவதாகவும், இந்த ஐந்து வருடத்தில் இவர் இந்த காடை வளர்ப்பில் நல்ல வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
மேலும் காடைகளை வளர்ப்பதற்கு இவர் பெரிய அளவிலான ஒரு கொட்டகையை சிறப்பான முறையில் அமைத்து அந்தக் கொட்டகையில் காடைகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மற்றும் காடை வளர்ப்பில் தொடர்ந்து லாபம் இருந்துகொண்டே இருக்காது எனவும் ஒரு முறை நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கும் எனவும் கூறுகிறார்.
இவ்வாறு நஷ்டம் ஏற்பட்டால் காடை வளர்ப்பை செய்யாமல் விட்டு விடுவது தவறு ஆகும் எனவும் நஷ்டம் ஏற்பட்டாலும் அதனைத் தொடர்ந்து செய்து கொண்டு வந்தால் நிறைந்த வருமானம் அதிலிருந்து கிடைக்கும் என கூறுகிறார்.
காடை வளர்ப்பில் இவர் ஒவ்வொரு வயதில் இருக்கும் காடைகளை தனித்தனி பகுதிகளாக பிரித்து ஒரு பகுதியில் ஆயிரம் காடைகள் என்ற எண்ணிக்கையில் வளர்த்து வருவதாக கூறுகிறார்.
வயது வித்தியாசத்தில் உள்ள காடைகளை ஒன்றாக சேர்த்து வளர்ப்பதை விட ஒரே வயதில் இருக்கும் காடைகளை சேர்த்து வளர்த்தால் இறைச்சிக்கு அவைகளை அளிக்கும் போது சுலபமாக இருக்கும் என கூறுகிறார்.
இந்த முறையில் காடைகளை வளர்த்தால் காடைகள் சிறப்பாக வளர்ந்து நல்ல லாபத்தை அளிக்கும் என கூறுகிறார்.
காடை இறைச்சியின் மருத்துவ குணம் மற்றும் பராமரிப்பு முறை
காடை இறைச்சியில் அதிக அளவு மருத்துவ குணம் உள்ளதாகவும் இதனை உணவில் எடுத்துக் கொண்டால் நமக்கு பலவித நோய்கள் குணமாகி விடும் என கூறுகிறார்.
காடை இறைச்சியில் கொழுப்பு அதிகமாக இருக்காது எனவும் இதனால் உடல் எடை அதிகரித்தல் மற்றும் இருதய நோய்கள் வருவதை தடுக்க முடியும் என கூறுகிறார்.
ஆனால் ஆட்டு இறைச்சி மற்றும் பிற இறைச்சிகளில் கொழுப்புத் தன்மை அதிகமாக இருக்கும் எனவும், காடை இறைச்சி அனைவரும் உண்பதற்கு ஏற்ற உணவு வகை எனவும் கூறுகிறார்.
மேலும் காடை இறைச்சி கண்பார்வைக்கு மிகவும் நல்லது எனவும், நாட்டில் உள்ள அதிக அளவு மக்கள் இந்த காடை இறைச்சியை விரும்பி உண்டு வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இந்த காடை வளர்ப்பில் அதிக அளவு பராமரிப்பு இருக்காது எனவும், கடைகளுக்கு தேவையான தீவனங்களை அளித்து விட்டு அவைகளுக்கு நோய் ஏற்படுகிறதா என்பதை மட்டும் கவனித்தால் போதுமானது எனக் கூறுகிறார்.
காடைகளுக்கு நோய்கள் எதுவும் அதிகமாக ஏற்படாமல் இருப்பதற்கு காடைகள் இருக்கும் கொட்டகையை தினமும் இவர் சுத்தம் செய்து வருவதாக கூறுகிறார்.
ஏனெனில் கொட்டகையில் உள்ள அசுத்தத்தினால் காடைகளுக்கு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் இதனால் கொட்டகையை சுத்தம் செய்து தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்.
இந்த முறையில் காடைகளை பராமரித்து வளர்த்தால் மட்டும் போதுமானது எனக் கூறுகிறார்.
Fodder and immunization system
காடைகளுக்கு இவர் நல்ல சத்து நிறைந்த தீவனங்களை உணவாக அளித்து வளர்த்து வருவதாகவும் இதனால் இவருடைய காடைகள் நன்கு சத்து நிறைந்த காடைகளாக வளர்ந்து வருவதாக கூறுகிறார்.
காடைகளுக்கு இவர் தீவனமாக கம்பு மற்றும் கேழ்வரகு போன்ற தானிய வகைகளை அளித்து வருவதாகவும், மற்றும் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் இவர் கம்பெனி தீவனங்களை காடைகளுக்கு அளித்து வருவதாக கூறுகிறார்.
காடைகளுக்கு நீர் மற்றும் தீவனங்களை அளிப்பதற்கு இவர் பிளாஸ்டிக்கால் ஆன ஒரு பாத்திரத்தில் நீரினை அளித்து வருவதாகவும், காடைகள் அவைகளுக்கு தேவைப்படும் நேரங்களில் நீரினை எடுத்துக் கொள்ளும் எனவும் கூறுகிறார்.
இந்த முறையில் காடைகளுக்கு தீவனம் மற்றும் நீரினை அளிப்பது சுலபமாக இருக்கும் எனவும், எனவே காடை வளர்ப்பை தொடங்குபவர்கள் இந்த முறையை பின்பற்றி கொள்ளலாம் எனக் கூறுகிறார்.
இவருடைய காடைகளுக்கு அதிகமாக நோய் தாக்குதல் எதுவும் ஏற்படாது எனவும் ஏனெனில் இவர் இவருடைய காடை பண்ணையை மிகவும் தூய்மையாக பராமரித்து வருவதாக கூறுகிறார்.
அவ்வாறு நோய் தாக்குதல் காடைகளுக்கு ஏற்பட்டாலும் அதனை சரி செய்வதற்கு இவர் மருத்துவரின் உதவியை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.
விற்பனை முறை மற்றும் லாபம்
காடை வளர்ப்பை இவர் மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் மற்றும் இவருடைய காடை மிகவும் சத்து நிறைந்த தீவனங்களை உண்டு வளர்வதால் இந்த காடையில் அதிக அளவு சத்துக்கள் இருப்பதாக கூறுகிறார்.
இதனால் இவருடைய பண்ணைக்கு அதிக வாடிக்கையாளர்கள் வந்து காடைகளை வாங்கி செல்வதாகவும் மற்றும் இவருடைய ஊரில் உள்ள மக்களும் இவருடைய பண்ணையில் வந்து காடைகளை குறைந்த அளவில் வாங்கி செல்வதாக கூறுகிறார்.
இதன் மூலம் இவர் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாகவும், மேலும் இவர் இவருடைய காடை வளர்ப்பை மிகவும் சிறப்பான முறையில் விரும்பி நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் படிக்க:சிறப்பான வேர்க்கடலை சாகுபடி.