காடை வளர்ப்பில் நிறைந்த வருமானம்.

திருமதி மும்தாஜ் அவர்கள் ஒரு காடை பண்ணையினை வைத்து சிறப்பாக நடத்தி அதன் மூலம் அதிக அளவில் வருமானத்தை பெற்று வருகிறார். திருமதி மும்தாஜ் அவர்களைப் பற்றியும் அவருடைய காடை பண்ணையினை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

திருமதி மும்தாஜ் அவர்களின் வாழ்க்கை

திருமதி மும்தாஜ் அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஊத்மலை என்னும் ஊரில் வசித்து வருகிறார். இங்கு திருமதி மும்தாஜ் அவர்கள் அவரின் வீட்டிலேயே ஒரு காடை பண்ணையினை வைத்து சிறப்பாக நடத்தி வருகிறார். இவரின் கணவரின் பெயர் சாகுல் ஹமீது ஆகும்.

திருமதி மும்தாஜ் அவர்கள் இந்த காடை பண்ணை பராமரிப்பு நேரம் போக மீதி உள்ள நேரங்களில் தையல் வேலையை செய்து வருவதாக கூறுகிறார்.

காடை பண்ணையின் தொடக்கம்

திருமதி மும்தாஜ் அவர்களுக்கு முதலில் இந்த காடைப்பண்ணை வளர்ப்பு பற்றி ஒரு சிறிய அளவு கூட தெரியாது என கூறுகிறார். இந்தப் பண்ணை வளர்ப்பைப் பற்றி சமூக வலைதளங்களின் மூலம் பார்த்து அறிந்து கொண்டதாகவும் கூறுகிறார்.

வேட்டு வளம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு ராஜேந்திரன் அவர்களின் ஆலோசனையின் மூலம் திருமதி மும்தாஜ் அவர்கள் அனைத்தையும் அறிந்து கொண்டு இந்த பண்ணை வளர்ப்பு முறையை தொடங்கியதாகவும் கூறுகிறார்.

இவரின் மூலமே திருமதி மும்தாஜ் அவர்களுக்கு காடை பண்ணை வளர்ப்பில் ஆர்வம் வந்ததாகவும் கூறுகிறார்.

இப்பொழுது பொதுவாக அதிக அளவில் கோழிப்பண்ணை, ஆட்டுப்பண்ணை போன்ற பண்ணைகள் உள்ளது .ஆனால் திருமதி மும்தாஜ் அவர்கள் இந்த காடை பண்ணை வளர்ப்பினை தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் இயற்கையாகவே காடைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் இருப்பதே காரணம் என கூறுகிறார்.

பொதுவாக காடைகளில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இதனால் இவைகளுக்கு சொட்டு மருந்து மற்றும் ஊசி போன்ற எதுவும் போட வேண்டிய அவசியமில்லை என திருமதி மும்தாஜ் அவர்கள் கூறுகிறார்.

காடை வளர்ப்பில் இருபத்து ஐந்து நாட்களுக்குள்ளேயே லாபம் கிடைத்து விடும் எனவும் கூறுகிறார்.ஆனால் கோழி வளர்ப்பில் லாபம் பெற நான்கு மாதங்கள் தேவைப்படுவதாக கூறுகிறார்.

மேலும் கோழிகளுக்கு அதிக அளவில் செலவு செய்து தீவனம் அளிக்க வேண்டும் எனவும் கூறுகிறார். ஆனால் காடை வளர்ப்பில் இவ்வாறான எந்த செலவும் அதிக அளவில் இருக்காது எனவும் கூறுகிறார். காடைகளுக்கு வீட்டிலிருந்தே தீவனங்களை தயாரித்து அளிக்கலாம் என திருமதி மும்தாஜ் அவர்கள் கூறுகிறார்.

திருமதி மும்தாஜ் அவர்கள் இந்த காடை பண்ணையினை தொடங்குவதற்கு காடைகளை சங்கரன்கோயில் அருகிலுள்ள பொதிகை பட்டி என்னும் ஊரில் வாங்கியதாக கூறுகிறார்.

திருமதி மும்தாஜ் அவர்கள் ஆரம்பத்தில் 300 காடைகளை வாங்கி வந்ததாகவும் அதில் ஒரு காடைக்கு கூட எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறுகிறார். ஒரு காடையை ஆறு ரூபாய்க்கு வாங்கியதாகவும் திருமதி மும்தாஜ் அவர்கள் கூறுகிறார்.

இந்த காடைகள் சிறிய குஞ்சுகளாக இருப்பதால் அவைகளுக்கு குளிரை தாங்கிக் கொள்ளும் தன்மை இருக்காது எனவும் கூறுகிறார். இதனால் இந்த குஞ்சுகளை ஒரு பானையில் வைத்து அதனை அடைகாக்கும் முறையில் வைத்திருந்ததாக கூறுகிறார்.

தொடர்ந்து எட்டு நாட்களுக்கு இந்த அடைகாத்தல் முறையை பின்பற்ற வேண்டும் எனவும், 300 காடை குஞ்சுகளுக்கும் ஒரே ஒரு பானை போதுமானது எனவும் திருமதி மும்தாஜ் அவர்கள் கூறுகிறார்.

இந்தப் பானை அடைகாத்தல் முறையினால் அதிகளவு பொருளாதார செலவு ஏற்படாது எனவும் கூறுகிறார்.

காடைகளுக்கு அளிக்கும் தீவனங்கள்

திருமதி மும்தாஜ் அவர்கள் அவர்களின் அனைத்து காடைகளுக்கும் இவர்களே தீவனம் தயாரித்து அளித்து வருவதாக கூறுகிறார்.

கம்பு, மக்காச்சோளம், வெள்ளை சோளம்,கடலை புண்ணாக்கு ஆகியவைகளை ஒன்றாக சேர்த்து அரைத்து கோழிகளுக்கு தீவனமாக அளித்து வருவதாக கூறுகிறார்.

வெளியில் தீவனங்கள் வாங்கி காடைகளுக்கு அளிப்பதை விட இவர்களே தீவனங்களை தயாரித்து அளிப்பதால் செலவு குறையும் எனவும் திருமதி மும்தாஜ் அவர்கள் கூறுகிறார்.

திருமதி மும்தாஜ் அவர்கள் இருக்கும் ஊரானது கிராமம் என்பதால் தானியங்கள் ஆனது எளிதில் கிடைத்து விடுவதாகவும் கூறுகிறார். மிக குறைந்த விலையில் தானியங்களை வாங்கி அவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காடைகளுக்கு அளித்து வருவதாக கூறுகிறார்.

300 காடைகளுக்கு மொத்தமாக 120 கிலோ தீவனம் மட்டும் செலவாகும் எனவும் கூறுகிறார். மேலும் இவர்களே தானியங்களை வாங்கி தீவனங்களை தயார் செய்வதால் அதிக அளவு லாபம் கிடைப்பதாகவும் திருமதி மும்தாஜ் அவர்கள் கூறுகிறார்.

இவர்களின் காடைகள் அனைத்தும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதாகவும் கூறுகிறார். மேலும் இவைகளை எந்த நோயும் தாக்கி விடக்கூடாது என்பதற்காக ஒரு டானிக்கை மட்டும் சிறிதளவு நீரில் சேர்த்து அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

இந்த டானிக்கை காடைகளுக்கு தினமும் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தினமும் அளிக்கலாம் எனவும், இல்லையெனில் வாரத்திற்கு ஒரு முறை மட்டும் அளிக்கலாம் எனவும் கூறுகிறார். இதனை தினசரி காடைகளுக்கு அளிப்பது மிக சிறப்பான ஒன்று எனவும் கூறுகிறார்.

காடைகள் ஆனது இவர்கள் அளிக்கும் தீவனத்தை உண்டே 20 நாட்களில் நல்ல எடையை பெற்று விடுகிறது எனவும் திருமதி மும்தாஜ் அவர்கள் கூறுகிறார். மேலும் காடைகள் இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பதால் எந்த நோயும் இவற்றை தாக்குவது இல்லை எனவும் கூறுகிறார்.

மேலும் தீவன செலவை குறைப்பதற்கு முருங்கைக்கீரையை காடைகளுக்கு அளித்து வருவதாகவும் கூறுகிறார். இதனை மதிய நேரங்களில் காடைகளுக்கு அளிப்பதாகவும் அதனை காடைகள் ஆனது விரும்பி உண்பதாகவும் திருமதி மும்தாஜ் அவர்கள் கூறுகிறார்.

இந்த முருங்கைக்கீரையை காடைகளுக்கு அளிப்பதால் தீவனச்செலவு குறையும் எனவும் கூறுகிறார்.

பண்ணையின் பராமரிப்பு முறை

திருமதி மும்தாஜ் அவர்களும் அவருடைய கணவரும் இந்த காடை பண்ணையினை மிகவும் சிறப்பான முறையில் பராமரித்து வருகின்றனர்.

காடைகளுக்கு தீவனங்களை நல்ல முறையில் அளித்தும் வருகின்றன. மேலும் காடைகளுக்கு நீரினை காலையிலிருந்து இரவு வரை மூன்று முறை அளித்து வருவதாகவும் திருமதி மும்தாஜ் அவர்கள் கூறுகிறார்.

வெயில் காலங்களில் மட்டும் காடைகள் ஆனது அதிக அளவு நீர் அருந்தும் எனவும் இதனால் வெயில் காலங்களில் மட்டும் நீரினை சிறிதளவு சேர்த்து அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் தீவனங்களையும் காலையில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் அளித்து வருவதாக கூறுகிறார். திருமதி மும்தாஜ் அவர்கள் இந்த காடை பண்ணை வளர்ப்பில் அதிக அளவு கஷ்டம் ஏதும் இல்லை எனவும் கூறுகிறார்.

மேலும் காடைகள் நீர் அருந்தும் பெட்டியினை எட்டு நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து வருவதாகவும் கூறுகிறார். மற்றும் காடைகளுக்கு உணவு அளித்து அதனை பராமரிக்கும் முறையை மிக தூய்மையாகவும், சிறப்பாகவும் செய்து வருகிறார்.

காடைகளுக்கு ஏதாவது உடலில் பாதிப்பு ஏற்பட்டால் அவைகள் ஒரு நாளுக்குள்ளேயே  இறந்து விடும் எனவும் கூறுகிறார். எனவே காடைகளை மிகப் பாதுகாப்பான முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும் திருமதி மும்தாஜ் அவர்கள் கூறுகிறார்.

இந்த காடை வளர்ப்பு முறையினை அனைத்து பருவ காலங்களிலும்  செய்யலாம் எனவும், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் திருமதி மும்தாஜ் அவர்கள் கூறுகிறார்.

பண்ணையின் அமைப்பு

திருமதி மும்தாஜ் மற்றும் அவருடைய கணவர், அவர்களின் காடை பண்ணை மிக சிறப்பான முறையில் அமைத்து உள்ளனர்.

இவர்கள் இந்த பண்ணயினை அமைத்ததற்கு முதலில் 28000 ரூபாய் செலவு ஆனதாகவும், ஆரம்பத்தில் சிறிய அளவில் பண்ணையினை அமைத்து காடைகளின் மூலம் வரும் லாபத்தை வைத்து பெரிய அளவில் பண்ணை அமைத்ததாகவும் திரு சாகுல் ஹமீது அவர்கள் கூறுகிறார்.

மேலும் பண்ணையின் கூடாரங்களில் தகர அட்டையை வைத்து அமைத்துள்ளதாக கூறுகிறார். மற்றும் பண்ணையை சுற்றியும் தகரத்தினால் ஆன அட்டையினை வைத்து அமைத்துள்ளதாகவும் கூறுகிறார்.

இந்த பண்ணையின் அமைப்பை திருமதி மும்தாஜ் அவர்கள் சமூக வலைதளங்களின் மூலமே பார்த்து அறிந்து கொண்டு அதனை அமைத்ததாகவும் கூறுகிறார்.

மேலும் பண்ணையில் சிமெண்ட் தரையை போடக் கூடாது எனவும் கூறுகிறார். ஏனெனில் காடைகளுக்கு தீவனம் அளிக்கும் போது காடைகள் தீவனங்களை கிளறிய படி உண்ணும் இதனால் சிமெண்ட் தரையை பண்ணையில் போட்டால் காடைகள் தீவனத்தை நல்ல முறையில் உண்ணாது எனவும் கூறுகிறார்.

இதனால் பண்ணையில் மண்ணினை சமப்படுத்தி காடைகளுக்கு தீவனத்தை அளிப்பது மிக சிறப்பான ஒரு வழிமுறை எனவும் திருமதி மும்தாஜ் அவர்கள் கூறுகிறார்.

திருமதி மும்தாஜ் அவர்களின் மொத்த பண்ணையை அமைப்பதற்கு மொத்தமாக 60,000 செலவு ஆனதாகவும் கூறுகிறார்.இவர்களின் மொத்த பண்ணையில் 700 காடைகளை வைத்து மிக சுலபமான முறையில் வளர்த்த முடியுமெனவும் கூறுகிறார்.

மேலும் இவர்களுக்கு காடைகள் விற்பனையில் அதிக அளவு வருமானம் வருவதாகவும், அதிக நபர்கள் காடைகளை வாங்குவதற்கு பண்ணைக்கு வருவதாகவும் திருமதி மும்தாஜ் அவர்கள் கூறுகிறார்.

காடை வளர்ப்பின் லாபம் மற்றும் பயன்

திருமதி மும்தாஜ் அவர்களும், அவருடைய கணவரும் இந்த காடை வளர்ப்பு முறையினால் அதிக அளவு வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகின்றனர்.

காடைகளுக்கு தீவனங்களை நாமே தயாரித்து அளித்து வந்தால் லாபமானது அதிக அளவில் கிடைக்கும் எனவும் திருமதி மும்தாஜ் அவர்கள் கூறுகிறார்.

இந்த காடை வளர்ப்பு முறையினை அனைவராலும் மிக சிறப்பான முறையில் செய்ய முடியும் எனவும் கூறுகிறார். இதனால் அதிக அளவு லாபத்தையும் பெறலாம் எனவும் கூறுகிறார்.

இந்த காடை வளர்ப்பினால் பண்ணையில் எந்தவித துர்நாற்றமும் வீசுவதற்கு வாய்ப்பில்லை எனவும் கூறுகிறார். மேலும் திருமதி மும்தாஜ் அவர்களே கோழிகளுக்கான இன்குபேட்டர்யினை சமூக வலைதளங்களின் மூலம் பார்த்து அறிந்து கொண்டு அதனை இவரே உருவாக்கியுள்ளார்.

இந்த இன்குபேட்டர்யினை திருமதி மும்தாஜ் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் அமைத்து உள்ளார். பொதுவாக காடைகள் ஆனது மருத்துவ குணம் உள்ள உணவாக அழைக்கப்படுவதாகவும் கூறுகிறார்.

திருமதி மும்தாஜ் அவர்கள் காடைகளின் இறைச்சிகளை மிகக்குறைந்த விலைக்கே அளித்து வருவதாகவும் கூறுகிறார். இந்த காடை வளர்ப்பில் மாதத்திற்கு 15000 வரை வருமானம் வரும் எனவும் திருமதி மும்தாஜ் அவர்கள் கூறுகிறார்.

காடைகள் வளர்ப்பதற்கு பண்ணைகள் சிறப்பான முறையில் அமைந்து இருந்தால் மட்டும் போதுமானது என திருமதி மும்தாஜ் அவர்கள் கூறுகிறார்.

திருமதி மும்தாஜ் அவர்கள் இந்த காடை பண்ணையினை மிக சிறப்பான முறையிலும்,தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க:கோழிகளுக்கு தீவனம் வைக்க ஆட்டோமேட்டிக் இயந்திரம்.

 

 

 

Leave a Reply