தக்காளி விவசாயத்தில் நிறைந்த வருமானம்.

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் தக்காளி விவசாயத்தை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தைப் பெற்று வருவதாக கூறுகிறார். இவரைப் பற்றியும், இவருடைய தக்காளி விவசாய முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

தக்காளி விவசாயத்தின் தொடக்கம்

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் தக்காளி விவசாயத்தை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவர் சிறு வயதில் இருக்கும் போது இவருடைய ஊரில் உள்ள அனைவரும் அதிகளவில் விவசாயத்தையே செய்து வந்ததாகவும் இதனை பார்த்து வளர்ந்த இவருக்கும் விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு நாமும் வளர்ந்த பிறகு விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இவர் விவசாயத்தை தொடங்கியதாக கூறுகிறார்.

விவசாயத்தில் இவருக்கு 30 வருடங்களாக அனுபவம் இருப்பதால்  அனைத்து வகை விவசாயத்தையும் இவர் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் மற்றும் தக்காளி விவசாயத்தை இவர் கடந்த இரண்டு வருடங்களாக மிக சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் தக்காளி விவசாயத்தை தேர்ந்தெடுத்து செய்ததற்கு காரணம் தக்காளி சாகுபடியின் மூலம் அதிக அளவு வருமானம் கிடைக்கும் எனவும், இதன் காரணமாகவே இவர் தக்காளி விவசாயத்தை தேர்ந்தெடுத்து இப்பொழுது சிறப்பான முறையில் செய்து வருவதாகக் கூறுகிறார்.

Method of cultivation of tomato

தக்காளி விவசாயத்தை இவர் ஒரு ஏக்கர் நிலத்தில் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் இந்த தக்காளி சாகுபடியை இவர் கடந்த இரண்டு வருடங்களாக செய்து வருவதாக கூறுகிறார்.

தக்காளி சாகுபடி செய்வதற்கு இவர் தக்காளி நாற்றுகளை வாங்கி நட்டு வளர்த்து வருவதாகவும் மற்றும் தக்காளி செடிகளை இவர் விதைகளின் மூலம் உருவாக்கி அதனையும் நட்டு வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் தக்காளி நாற்றுகளையும் மற்றும் தக்காளி விதைகளை நிலத்தில் விதைப்பதற்கு முன்பு நிலத்தினை நன்றாக இயற்கை உரமான மாட்டுச் சாணத்தினை போட்டு உழுது பதப்படுத்தி வைத்துக் கொள்வதாக கூறுகிறார்.

இவ்வாறு நிலத்தினை இயற்கை உரங்களை அளித்து பதப்படுத்தி வைத்த பிறகு நாற்றுகளையும் மற்றும் விதைகளையும் நிலத்தில் விதைத்து சிறப்பான முறையில் பராமரித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் சிவன் என்ற தக்காளி வகையை விவசாயம் செய்து தருவதாகவும் இந்த வகை தக்காளி அதிகளவில் விளைச்சலை அளிக்கும் எனவும் தக்காளிப் பழமும் சிறப்பாக பெரியதாக வளரும் எனவும் கூறுகிறார்.

இவ்வாறு தக்காளி பழம் பெரியதாகவும் மற்றும் பார்ப்பவரைக் கவரும் வகையிலும் இருப்பதால் தக்காளி பழங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் தக்காளிகளை அதிகளவில் விரும்பி வாங்கிச் செல்வர் எனவும் கூறுகிறார்.

மேலும் தக்காளி நாற்று நட்ட பிறகு நாற்றானது குறிப்பிட்ட அளவு வளர்ந்த பிறகு அந்தச் செடிகளை எடுத்த ஒரு கயிரில் பந்தல் போன்று அமைத்து கட்ட வேண்டும் எனவும், இந்த முறையில் செடிகளைக் கட்டி வளர்த்தால் தான் செடிகள் பெரியதாக வளர்ந்து அதிகளவு விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.

ஒரு ஏக்கர் நிலத்தில் இவர் 12 ஆயிரம் தக்காளி நாற்றுக்கள் நட்டு வளர்த்து வருவதாகவும் மற்றும் ஒவ்வொரு செடிகளுக்கு இடையிலும் இரண்டிலிருந்து மூன்று அடி இடைவெளி விட்டு நட்டு வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் 2 லிருந்து 2 1/4 இடைவெளியில் நாற்றுகளை நட்டு வளர்த்தால் அதிக அளவில் மகசூல் கிடைக்கும் எனவும் இரண்டு அடிகளுக்கு குறைவாக நாற்றுகளை நட்டு வளர்த்தால் விளைச்சல் குறைவாகவே கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

நாற்றுக்களை நடும் போது தனித்தனி நாற்றுகளாகவே தக்காளி நாற்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் எனவும் இரண்டு நாற்றுகளை சேர்த்து நட்டு வளர்த்தால் விளைச்சல் குறைந்த அளவிலேயே இருக்கும் என கூறுகிறார்.

அறுவடை செய்யும் முறை மற்றும் நீரினை அளிக்கும் முறை

தக்காளி நாற்றுகளை நட்ட நாளிலிருந்து 40 லிருந்து 50 நாளுக்குள் அறுவடைக்கு வந்து விடும் எனவும், இவ்வாறு தக்காளி அறுவடை வந்த பிறகு தக்காளி செடியில் இருந்து அதிகளவு தக்காளிகளை நாம் அறுவடை செய்யலாம் என கூறுகிறார்.

தொடர்ந்து 2 மாதம் வரை சிறப்பான முறையில் மகசூல் கிடைத்துக் கொண்டே இருக்கும் எனவும், செடிகளை அதிக அளவில் பராமரித்து வளர்த்தால் விளைச்சல் மிக சிறப்பாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

தக்காளியை அறுவடை செய்யும் போது நன்றாக பழுத்த தக்காளியை மட்டும் அறுவடை செய்யாமல் பாதி அளவு பழுத்துள்ள தக்காளி பழத்தையும் அறுவடை செய்து கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.

தக்காளி சாகுபடி செய்வதற்கு நீர் அதிக அளவில் தேவைப்படும் எனவும் மற்றும் இவர் செடிகளுக்கு நீரினை அளிப்பதற்கு சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.

தக்காளி செடிகளுக்கு மழைக் காலங்களில் எட்டு நாட்களுக்கு ஒரு முறை நீரினை அளித்து வருவதாகவும் மற்றும் மழை இல்லாத காலங்களில் செடிகளுக்கு நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீரினை அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

சொட்டு நீர் பாசன முறையை இவர் பயன்படுத்தி வருவதால் குறைந்த அளவு நீரானது செலவாகும் எனவும், எனவே சொட்டு நீர் பாசன முறையை அனைவரும் பயன்படுத்தலாம் எனவும் கூறுகிறார்.

Maintenance method

தக்காளி விவசாயத்தை மட்டும் செய்வதால் அதிகளவில் விளைச்சல் கிடைக்காது எனவும் அதனை சரியான முறையில் பராமரித்து வளர்த்தால் மட்டுமே நல்ல விளைச்சல் கிடைக்கும் என கூறுகிறார்.

தக்காளி சாகுபடி செய்யும் நிலமானது தரமான மண்ணாக இருந்தால் செடிகள் வளர்ந்த பிறகு நிலத்தில் களைகளை எடுத்த பிறகு செடிகளுக்கு உரத்தினை அளிக்கலாம் எனவும் இதுவே தக்காளி சாகுபடி செய்யும் மண்ணானது தரம் குறைவானதாக இருந்தால் செடிகளை நட்ட பத்தாவது நாளில் உரத்தினை அளிக்கலாம் எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் செடிகளுக்கு அதிகளவில் இயற்கை உரங்களை மட்டுமே அளித்து வருவதாகவும் மற்றும் செடிகளுக்கு ஏற்படும் நோய்களை தடுப்பதற்கு இவர் கடைகளிலிருந்து மருந்துகளை வாங்கி அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் சில சமயங்களில் செடிகளுக்கு செயற்கை உரங்களை குறைந்த அளவில் அளிப்பதாகவும், மற்றும் இவற்றுடன் இயற்கை மருந்துகளை இவர் செடிகளுக்கு அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

இந்த முறையில் செடிகளைப் பராமரித்தல் வளர்த்தால் மட்டுமே செடிகள் நன்றாக வளர்ந்து நல்ல விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

தக்காளி சாகுபடியை இவர் சிறப்பான முறையில் செய்து அதனை அறுவடை செய்து சந்தைகளில் விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் இவருடைய ஊரில் குறைந்த அளவில் தக்காளி கேட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கும் இவர் தக்காளியை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் தக்காளி பழம் இன்றுள்ள நிலையில் அதிக அளவு விலைக்கு விற்பனையாகி வருவதாகவும் ஒரு ஏக்கர் தக்காளி சாகுபடியின் மூலம் இரண்டிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

மற்றும் இவர் தக்காளி விவசாயத்தை மிகச் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், இந்த தக்காளி சாகுபடியின் மூலம் இவர் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் படிக்க:சிறப்பான கத்தரிக்காய் சாகுபடி.

Leave a Reply