மண்புழு உற்பத்தியில் நிறைந்த லாபம்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் உள்ள வண்டியூர் என்னும் கிராமத்தில் திரு ராஜராஜன் அவர்கள் ஒரு மண்புழு உற்பத்தி செய்யும் பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி அதன் மூலம் அதிகளவு லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், மண்புழு உற்பத்தி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

திரு ராஜராஜன் அவர்களின் வாழ்க்கை

திரு ராஜராஜன் அவர்கள் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் உள்ள வண்டியூர் என்னும் கிராமத்தில் வசித்து வருவதாகவும், இவர் இங்கு சொந்தமாக ஒரு மண்புழு உற்பத்தி செய்யும் பண்ணையை வைத்து அதன் மூலம் நிறைந்த லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

11 வருடங்களாக இவர் இந்த மண்புழு உற்பத்தி செய்யும் பண்ணைையை வைத்து நடத்தி வருவதாகவும், இவருடைய பண்ணையின் பெயர் இமயம் மண்புழு உரம் உற்பத்தி பண்ணை எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் இந்த 11 வருடங்களில் இந்த மண்புழு உற்பத்தி செய்யும் பண்ணையை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும், இதன் மூலம் இவருக்கு லாபங்கள் அதிக அளவில் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

அதிக அளவு வாடிக்கையாளர்கள் இவருடைய பண்ணைக்கு வந்து மண்புழுக்களை வாங்கிச் செல்வதாகவும், கோழிப் பண்ணைகள் மற்றும் வாத்து பண்ணைகள் வைத்துள்ள பண்ணையாளர்கள் இந்த மண்புழுக்களை அதிக அளவு வாங்கி அவர்களுடைய பண்ணையிலுள்ள கோழிகளுக்கும் வாத்துக்களுக்கும் அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

The beginning of earthworm farm

திரு ராஜராஜன் அவர்களின் குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம் எனவும், இதனால் இவருக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகமாக ஏற்பட்டு இந்த மண்புழு உற்பத்தி செய்யும் பண்ணையை தொடங்கியதாகவும் கூறுகிறார்.

மேலும் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இவரால் முடிந்த ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற தூண்டுதலின் காரணமாக இவர் இந்த பண்ணையை தொடங்கியதாகவும், இவ்வாறு இவர் உற்பத்தி செய்யும் மண்புழு உரத்தை முழுவதும் இயற்கையான முறையிலேயே செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மண்புழு உரம் தயாரிக்கும் முறையைப் பற்றி நம்மாழ்வார் ஐயாவிடம் பயிற்சி எடுத்துக் கொண்டதாகவும், மேலும் வேறு சில இடங்களுக்குச் சென்று மண்புழு உரம் தயாரிக்கும் முறையைப் பற்றி அறிந்து கொண்டும் இந்த பண்ணையை தொடங்கியதாக திரு ராஜராஜன் அவர்கள் கூறுகிறார்.

பண்ணையின் அமைப்பு மற்றும் சிறப்பு

திரு ராஜராஜன் அவர்கள் ஒரு ஏக்கர் பரப்பளவில் மண்புழு உரத்தை தயாரித்து வருவதாகவும், இவர்கள் தயாரிக்கும் மண்புழு உரம் மற்ற மண்புழு தயாரிக்கும் பண்ணைகளை விட தரத்தில் உயர்ந்ததாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் மற்ற பண்ணைகளில் எல்லாம் மண்புழு உரத்தை இயற்கையான முறையில் யாரும் அதிக அளவில் தயாரிப்பதில்லை எனவும், ஆனால் இவர் இயற்கையான முறையில் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் செறிவூட்டப்பட்ட மண்புழு உரத்தைத் தயாரித்து வருவதாகவும் கூறுகிறார்.

இவ்வாறு செரிவூட்டப்பட்ட மண்புழு உரத்தைத் தயாரித்து விவசாயிகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் இவர் அளித்து வருவதாகவும், வாடிக்கையாளர்களும் அதிக அளவில் இவருடைய பண்ணைக்கு வந்து மண்புழு உரத்தை பெற்று செல்வதாகவும் கூறுகிறார்.

திரு ராஜராஜன் அவர்கள் இவருடைய பண்ணையில் மொத்தமாக 100 படுக்கைகளைக் வைத்து மண்புழு உரத்தைத் தயாரித்து வருவதாகவும், இந்த அனைத்தையுமே இயற்கையான முறையில் மட்டுமே தயாரித்து வருவதாகவும் திரு ராஜராஜன் அவர்கள் கூறுகிறார்.

Method of making earthworm compost

கோழிகளுக்கு வாத்துக்களுக்கும் தீவனமாகவும் மற்றும் மண்ணிற்கு உரமாகவும் பயன்படுத்தக கூடிய இந்த மண் புழுக்களை உற்பத்தி செய்வதற்கு மக்கிய பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், எந்தப் பொருட்கள் மக்கி இருக்கிறதோ அந்த பொருட்களை கொண்டு இந்த மண்புழுக்களை உற்பத்தி செய்துகொள்ள முடியும் எனவும் திரு ராஜராஜன் அவர்கள் கூறுகிறார்.

மண்புழு உரத்தை தயாரிப்பதற்கு முதலில் ஒரு அடி உயரமும், 4 அடி அகலமும் மற்றும் தேவைக்கு ஏற்ப நீளத்தையும் கொண்டு ஒரு தொட்டியை அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும், இந்த அளவுகளில் மண் புழுக்களை உற்பத்தி செய்கின்ற தொட்டியை அமைக்கும் போது புழுக்கள் நல்ல முறையில் வளரும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த முறையில் மண்புழு உரத்தை தயார் செய்வதற்கு தொட்டியை அமைத்துக் கொண்டு அந்த தொட்டியில் மண்ணை போட்டு நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும், அந்த மண்ணில் தேவையில்லாத மக்கிய பொருட்களை போட்டு ஒன்றாக கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறுகிறார்.

இவ்வாறு இதனை செய்து முடித்து அதற்குப் பிறகு மண்புழுக்களை எடுத்து அந்த தயார் செய்து வைத்துள்ள தொட்டியில் போட்டுக் கொள்ள வேண்டும் எனவும், இவ்வாறு செய்ததற்குப் பிறகு மண்புழுக்களே தானாக அதனுடைய வேலையை தொடங்கி விடும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த அளவுகளில் தொட்டியைக் அமைத்து அதில் மண் புழுக்களை உற்பத்தி செய்தால் மண்புழுக்கள் எந்தவித பாதிப்பும் இன்றி நல்ல வளர்ச்சியை பெறும் எனவும், இதுவே வேறு அளவு முறையில் தொட்டியை அமைத்து அதில் மண் புழுக்களை வளர்த்தால் மண்புழுவின் வளர்ச்சி குறைந்த அளவே இருக்கும் எனவும் திரு ராஜராஜன் அவர்கள் கூறுகிறார்.

மண்புழு தொட்டியை அமைப்பதற்கான எளிய முறை

மண்புழு உரத்தை தயார் செய்வதற்கு பயன்படுத்தும் தொட்டியை அமைக்கும் முறை மிகவும் சுலபமான முறை எனவும், கடைகளில் குறைந்த விலையில் விற்பனை ஆகின்ற கல்லால் செய்த பலகையை வாங்கி வந்து அதனை ஒன்றாக வைத்து நாமே தொட்டி போன்ற அமைப்பில் அமைத்துக் கொள்ள முடியும் எனவும் கூறுகிறார்.

மேலும் ஒரு தொட்டியை அமைப்பதற்கு ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரையில் மட்டுமே செலவு ஆகும் எனவும், ஆனால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

ஒவ்வொரு விவசாயிகளும் மண்புழு உரத்தை அவர்களுடைய நிலத்திற்கு பயன்படுத்தி வந்தால் அவர்களுடைய நிலம் மிகவும் ஆரோக்கியமானதாக மாறிவிடும் எனவும் திரு ராஜராஜன் அவர்கள் கூறுகிறார்.

Sales method and profit

திரு ராஜராஜன் அவர்கள் இவருடைய மண்புழு உற்பத்தி பண்ணையில் இருந்து மண்புழு உரத்தை மட்டும் மக்களுக்கு விற்பனை செய்யாமல் அதிலிருந்து தயாரிக்கப்படும் பலவகை பொருட்களை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மண்புழு உரம், மண்புழுக்கள், மண்புழு குளியல் நீர், இயற்கை பூச்சி விரட்டி மருந்து மற்றும் இயற்கை டானிக் ஆகிய வகைகளை உற்பத்தி செய்து இவர் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் விற்பனை செய்து வரும் அனைத்து இயற்கை பொருட்களையும் மிகக் குறைந்த விலையில் மட்டுமே விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இந்த மண்புழு உற்பத்தி முறையில் அதிக அளவு லாபத்தை பெற முடியும் எனவும், மற்ற தொழில்களை விட இந்த மண் புழு உற்பத்தி முறையில் நமக்கு நிறைந்த லாபம் கிடைக்கும் எனவும் திரு ராஜராஜன் அவர்கள் கூறுகிறார்.

ஏனெனில் இந்த மண்புழுக்கள் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் உரங்கள் அனைத்தும் விவசாயிகளிடமும், பண்ணையாளர்களிடமும் அதிக அளவு வரவேற்ப்பை பெற்றிருப்பதாகவும் கூறுகிறார்.

எனவே இந்த மண்புழு உற்பத்தியில் நிறைந்த லாபம் கிடைக்கும் எனவும், இந்த மண் புழு உற்பத்தியில் திரு ராஜராஜன் அவர்கள் அதிக அளவு பயனையும் மற்றும் லாபத்தையும் பெற்று வருவதாக கூறுகிறார்.

மேலும் படிக்க:இஸ்ரேல் நாட்டின் சிறப்பான வேர்கடலை பிடுங்கும் இயந்திரம்.

Leave a Reply