கரும்பு முருங்கைக்காய் உற்பத்தியில் நிறைந்த லாபம்.

திரு விஷ்ணு தரண் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள மூலசத்திரம் என்னும் கிராமத்தில் கரும்பு முருங்கைக்காய் உற்பத்தியை மிகவும் சிறப்பான முறையில் செய்து அதன் மூலம் நிறைந்த லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய கரும்பு முருங்கைக்காய் உற்பத்தியைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.




கரும்பு முருங்கைக்காய் உற்பத்தியின் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள மூலசத்திரம் என்னும் கிராமத்தில் திரு விஷ்ணு தரண் அவர்கள் கரும்பு முருங்கைக்காய் உற்பத்தியை மிக சிறப்பான முறையில் செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருகிறார்.

இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பட்டப் படிப்பினை பயின்று இருப்பதாகவும், இவருடைய தந்தை விவசாயி என்பதால் இவருக்கும் விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு இந்த கரும்பு முருங்கைக்காய் உற்பத்தியை தொடங்கியதாக கூறுகிறார்.

மேலும் இவர் இந்த கரும்பு முருங்கைக்காய் உற்பத்தியை செய்வதற்கு காரணம் இந்த முருங்கைக்காய் வகைகள் சந்தைகளில் அதிக விலையில் விற்பனை ஆகும் என்பதாலும், இதனால் லாபம் அதிக அளவில் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

இதனால் இவர் கரும்பு முருங்கைக்காய் உற்பத்தியை மிகவும் சிறப்பான முறையில் செய்து அதன் மூலம் நிறைந்த லாபத்தை பெற்று பயனடைந்து வருவதாக கூறுகிறார்.




Production method

திரு விஷ்ணு தரண் அவர்கள் இந்த கரும்பு முருங்கைக்காய் உற்பத்தியை இயற்கையான முறையில் செய்து வருவதாகவும், அடர்த்தியான முறையில் இவர் முருங்கை மரங்களை வைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

அடர் முறையில் முருங்கை மரத்தை நட்டு வளர்க்கும் போது ஒரு ஏக்கருக்கு 500 மரங்களை நட்டு வளர்க்க முடியும் எனவும் ஆனால் இடைவெளி விட்டு மரத்தினை நடும் போது குறைந்த அளவு மரங்களையே வைத்து வளர்க்க முடியும் என கூறுகிறார்.

மேலும் அடர் முறையில் மரங்களை நட்டு வளர்க்கும் போது காய் காய்ப்பதற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும், முருங்கை காய்கள் அதிக அளவில் விளைச்சலை தரும் எனவும் கூறுகிறார்.

ஒரு அடி அளவில் குழி தோண்டி மரத்தை நட்டு வளர்க்கலாம் எனவும், மழை மற்றும் பனிக்காலங்களில் இந்த முருங்கை சாகுபடியை செய்யக்கூடாது எனவும், ஏனெனில் அதிக அளவில் மண் ஈரமாக இருந்தால் மரம் நல்ல முறையில் வளராது என கூறுகிறார்.

வெயில் காலங்களில் இந்த கரும்பு முருங்கைக்காய் சாகுபடியை சிறப்பாக செய்ய முடியும் எனவும், வெயில் அதிகமாக இருக்கும் போது இந்த முருங்கை காய்கள் அதிக அளவில் விளைச்சல் ஆகும் என கூறுகிறார்.

அனைத்து மண் வகைகளிலும் இந்த கரும்பு முருங்கை உற்பத்தியை செய்ய முடியும் எனவும், செம்மண்ணில் இந்த முருங்கை வகை சிறப்பாக வளரும் எனவும் ஆனால் களிமண்ணில் கரும்பு முருங்கை சாகுபடி செய்யும்போது நிலத்தில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என திரு விஷ்ணு தரண் அவர்கள் கூறுகிறார்.

முதல் நான்கு மாதங்கள் மட்டும் களை எடுத்தால் போதும் எனவும் பிறகு மரம் வளர்ந்த பிறகு களைகள் அதிகளவில் முளைக்காது எனவும், இதற்கு என்று களைக்கொல்லி மருந்தை பயன்படுத்தினால் நிலத்தின் தரம் குறைந்து விடும் என கூறுகிறார்.




முருங்கையின் வகைகள் மற்றும் உரங்கள்

முருங்கை வகைகளில் மொத்தமாக மூன்று வகைகளில் முருங்கைகள் இருப்பதாகவும் அவை செடி முருங்கை, கரும்பு முருங்கை மற்றும் நாட்டு முருங்கை என திரு விஷ்ணு தரண் அவர்கள் கூறுகிறார்.

இதில் இவர் கரும்பு முருங்கை வகையை உற்பத்தி செய்து வருவதாகவும் இந்த முருங்கை வகையை சாகுபடி செய்வதில் இவருக்கு அதிக அளவு விளைச்சல் கிடைத்து நிறைந்த லாபத்தை பெறுவதாகவும் கூறுகிறார்.

இவருடைய மாமாவின் முருங்கை தோட்டத்திலிருந்து இவர் முருங்கை மரத்தை வாங்கி வந்து நட்டு வளர்த்து வந்ததாகவும், இப்பொழுது இவருடைய தோட்டத்திலிருந்தே எடுத்து நட்டு வளர்த்து வருவதாகவும், இப்பொழுது இவர் ஆயிரம் கரும்பு முருங்கை மரங்களை வைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

கரும்பு முருங்கைக்காய் உற்பத்தியை இவர் இயற்கையான முறையிலேயே செய்து வருவதாகவும், இவர் முருங்கை மரங்களுக்கு இயற்கை உரங்களை அளித்து வருவதாகவும், எந்த வித செயற்கை உரங்களையும் மரங்களுக்கு அளிப்பதில்லை எனவும் கூறுகிறார்.

வேப்பம் புண்ணாக்கு, மண்புழு உரம் மற்றும் கற்பூர கரைசல் ஆகிய இயற்கை உரங்களை இவர் மரங்களுக்கு அளித்து வருவதாகவும் இதனால் மரங்கள் நல்ல முறையில் வளர்ந்து விளைச்சலை தருவதாக திரு விஷ்ணு தரண் அவர்கள் கூறுகிறார்.

பூ விடும் நிலையில் தேமூர் கரைசலை பயன்படுத்தலாம் எனவும், இதனை பயன்படுத்தும்போது அனைத்துப் பூக்களும் நல்ல முறையில் காய்களாக மாறி நல்ல விளைச்சலைத் தரும் என கூறுகிறார்.

மேலும் இவர் தேமூர் கரைசல், கற்பூர கரைசல், பஞ்சகாவியா, ஜீவாமிர்தம், சூடோமோனஸ் மற்றும் மீன் அமிலம் ஆகிய இயற்கை உரங்களை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.




Method of supplying water to trees

முருங்கை மரத்தை பொறுத்த வரையில் மரம் வளர வளர பூ வைக்கும் எனவும் ஆனால் ஐந்து மாதத்திற்கு பிறகு வைக்கும் பூவில் இருந்தே முருங்கை காய்கள் அதிகளவில் காய்க்கும் என திரு விஷ்ணு தரண் அவர்கள் கூறுகிறார்.

முருங்கைச் செடியினை நட்டு ஒரு மாதம் வரை செடிகளுக்கு தினமும் நீரினை அளிக்க வேண்டும் எனவும், தினமும் கால் மணி நேரம் செடிகளுக்கு நீரினை அளிக்க வேண்டும் என கூறுகிறார்.

ஒரு மாதத்திற்கு பிறகு முருங்கை செடிக்கு ஆறிலிருந்து ஏழு நாட்களுக்கு ஒரு முறை நீரினை அளித்தால் போதுமானது எனவும்,பூ பூக்கும் நிலையில் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் நீரினை அளித்தால் போதுமானது என கூறுகிறார்.

ஏனெனில் மரம் வாடினால் தான் பூக்கள் அதிகளவில் பூக்கும் எனவும், அதிகளவு நீரை செடிகளுக்கு அளித்தால் பூக்கள் பாதிப்படைந்து காய்கள் காய்க்காமல் போய்விடும் எனவும் இதனால் நமக்கு நஷ்டம் ஏற்படும் என திரு விஷ்ணு தரண் அவர்கள் கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

திரு விஷ்ணு தரண் அவர்கள் முருங்கை கன்றுகளை இவரே உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாகவும், இந்தக் கன்றுகளை 25 ரூபாயிலிருந்து 40 ரூபாய் வரை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

இந்த கரும்பு முருங்கை உற்பத்தியில் நான்கு வகைகளில் லாபத்தை பெற முடியும் எனவும், காய்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் போது அதன் மூலம் நிறைந்த லாபத்தை பெற முடியும் என கூறுகிறார்.

மேலும் முருங்கை கன்றுகளை போட்டு விற்பனை செய்து அதன் மூலம் லாபத்தை பெற முடியும் எனவும், பூவினை பறித்து அதனையும் விற்பனை செய்து லாபத்தை பெற முடியும் எனவும் மேலும் முருங்கை இலையைப் பறித்து தூளாக செய்து விற்பனை செய்து அதன் மூலமும் லாபத்தை பெற முடியும் என கூறுகிறார்.

ஒட்டன்சத்திரம் சந்தையில் இவர் கரும்பு முருங்கை காய்களை விற்பனை செய்து வருவதாகவும், ஒரு கிலோ முருங்கைக்காய் 60 ரூபாய் என்ற விலைக்கு இவர் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

திரு விஷ்ணு தரண் அவர்கள் மிகவும் சிறப்பான கரும்பு முருங்கை உற்பத்தியை செய்து வருகிறார்.

மேலும் படிக்க:விரால் மீன் குஞ்சுகள் வளர்ப்பில் அசத்தும் இளைஞர்.

 




 

(A)

Leave a Reply