திரு ரிஷி அவர்கள் கோயமுத்தூரில் பண்ணைகளுக்கும் விவசாயத்திற்கும் பயன்படும் இயந்திரத்தை உருவாக்கும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் இதில் தோட்டங்களில் விதைகளை நடுவதற்கு பயன்படும் ஒரு இயந்திரத்தை உருவாக்கி உள்ளார். இவரைப் பற்றியும் இவருடைய விதை நடுவதற்கு பயன்படும் இயந்திரத்தை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.
Mr. Rishi is their machine company
கோயம்புத்தூரில் விவசாயத்திற்கும் மற்றும் பண்ணைகளுக்கும் பயன்படும் இயந்திரங்களை தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை திரு ரிஷி அவர்கள் நடத்தி வருவதாகவும், இதில் இவர் விவசாயத்திற்கு விதைகளை நடுவதற்கு பயன்படும் இயந்திரம் ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர் விவசாயத்திற்கும் மற்றும் பண்ணை களுக்கும் உதவியாக இருக்கும் பல இயந்திரங்களை உருவாக்கி உள்ளதாகவும், இந்த அனைத்து இயந்திரங்களுமே மக்களிடையே அதிகளவு வரவேற்ப்பை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
மற்றும் இவருடைய சிறுவயதிலிருந்தே இவருக்கு விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக இவர் இந்த இயந்திர நிறுவனத்தை தொடங்கியதாகவும் கூறுகிறார்.
மேலும் இவருடைய இயந்திர நிறுவனத்தின் பெயர் கோவை இன்டஸ்ட்ரீஸ் எனவும், இந்த நிறுவனத்தை இவர் மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும் இவர் தயாரிக்கும் அனைத்து இயந்திரங்களுமே தரம் உடையதாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
விதை நடுவதற்கு பயன்படும் இயந்திரம்
திரு ரிஷி அவர்கள் இந்த விதை நடுவதற்கு பயன்படும் இயந்திரம் மிகவும் சிறப்பான முறையில் செயல்படும் எனவும், இது விதைகளை மிகச் சிறப்பான முறையில் நடும் எனவும் கூறுகிறார்.
இந்த விதை நடுவதற்கு பயன்படும் இயந்திரம் விதையை நடுவதற்கு மட்டும் பயன்படுத்தாமல் உரங்களை செடிகளுக்கு போடுவதற்கும் பயன்படுத்தலாம் என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.
மேலும் இந்த இயந்திரத்தை இவருடைய நிறுவனம் சமீபத்தில் தான் வெளியிட்டுள்ளதாகவும், இந்த இயந்திரத்தில் இரண்டு வகைகள் இருப்பதாகவும் கூறுகிறார்.
அதில் முதல் இருந்த இயந்திரத்தின் மூலம் விதைகளை நடும் போது விதைகள் சற்று பாதிப்படைந்து விடும் எனவும், ஆனால் சமீபத்தில் வெளியிட்டுள்ள இந்த இயந்திரத்தை கொண்டு விதைகளை நடும் போது விதைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறுகிறார்.
மேலும் முதல் இருந்த இயந்திரத்தில் விதைகளை விதைத்து முடித்த பிறகு இயந்திரத்தை விட்டு கீழே இறங்கி வந்து தான் விதைகள் விழாமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படும் பட்டனை நிறுத்த முடியும் என கூறுகிறார்.
ஆனால் தற்போது இவர்கள் தயாரித்துள்ள புதிய இயந்திரத்தில் விதைகளை விதைத்து முடித்த பிறகு அவற்றை நிறுத்துவதற்கு இயந்திரத்தில் இருந்து கொண்டே நிறுத்தும் படி இயந்திரத்தை அமைத்து உள்ளதாக திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.
Advantages of the machine
திரு ரிஷி அவர்களுடைய நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தில் உள்ள விதைகள் விழுவதற்கு பயன்படும் கீர் பல்லினை மாற்றுவதற்கு சில நன்மைகள் இருப்பதாகவும் கூறுகிறார்.
மற்ற நிறுவனங்களின் உருவாக்கப்பட்டுள்ள இந்த விதை நடுவதற்கு பயன்படும் இயந்திரத்தில் விதைகள் விழும் கீர் பல்லானது எட்டில் இருந்து 12 சென்டி மீட்டர் என்ற அளவில் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும் என கூறுகிறார்.
ஆனால் இவர்களுடைய நிறுவனத்தை உருவாக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் 8லிருந்து 12 சென்டிமீட்டர் மற்றும் எட்டில் இருந்து பதினாறு செண்டிமீட்டர் போன்று 30 சென்டிமீட்டர் வரை விதைகள் விழும் கீர் பல்லினை மாற்றிக்கொள்ள முடியும் என கூறுகிறார்.
மேலும் இதனை பயன்படுத்தும் முறையை இயந்திரத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கற்றுத் தருவதாகவும், இயந்திரத்தை வாடிக்கையாளர்கள் பெற்ற இரண்டாவது நாளில் அவர்களுடைய பண்ணைக்கு சென்று கற்றுத் தருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இயந்திரங்களைப் பற்றி அனைத்து சந்தேகங்களையும் இவர் வாடிக்கையாளர்களுக்கு கற்றுத் தருவதாகவும், இது போன்று இவர்கள் நிறுவனத்தில் பலவித நன்மைகள் இருப்பதாக கூறுகிறார்.
இயந்திரம் செயல்படும் முறை
விதைகளை நிலத்தில் விதைப்பதற்கு முன்பு அந்த இயந்திரத்தில் விதைகளை போடுவதற்கு இருக்கும் பெட்டியில் இரண்டிலிருந்து இரண்டரை கிலோ விதைகளை போட்டு வைத்துக்கொள்ள வேண்டும் என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.
ஒவ்வொரு பெட்டியிலும் ஒவ்வொரு விதைகளைப் போட்டு விதைக்க முடியும் எனவும், இவ்வாறு விதைகளை பெட்டியில் போட்ட பிறகு இயந்திரத்தை இயக்கும் போது அந்த விதைகள் ஆனது ஒவ்வொன்றாக நிலத்தில் நடுவதற்கு தொடங்கி விடும் எனக் கூறுகிறார்.
மேலும் இதே போல் தான் உரங்களையும் நிலத்தில் போட வேண்டும் எனவும் விதை மற்றும் உரங்களை ஒன்றாக சேர்த்து கூட நிலத்தில் விதைக்கலாம் என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.
மேலும் விதைகளுக்கு இடைவெளி விட்டு விதைக்க வேண்டும் என்றால் ஒரு பெட்டியை விட்டு மற்றொரு பெட்டியில் விதைகளைப் போட்டு நிலத்தில் விதைகளை விதைக்கலாம் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த இயந்திரத்திற்கு ஒரு வருட வாரண்டி இருப்பதாகவும், இந்த இயந்திரம் எளிதில் பாதிப்படையாது எனவும் மிகவும் உறுதியாக இருக்கும் எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.
மேலும் விதைகளை விதைத்த பின் செடிகள் வளர்ந்த பிறகு அந்தச் செடிகளை பிடுங்குவதற்கு பயன்படும் இயந்திரத்தை இவர்கள் உருவாக்கிய உள்ளதாகவும், இந்த இயந்திரத்தை கொண்டு செடிகளை பிடுங்கும் போது வேலை செய்யும் நேரம் ஆனது குறையும் எனவும் கூறுகிறார்.
மேலும் இவர்களுடைய நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இயந்திரத்தை கொண்டு செடிகளை பிடுங்கும்போது இரண்டரை மணி நேரத்திலேயே ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ள செடிகளை பிடுங்கி விட முடியும் எனவும், ஆனால் வேலையாட்களைக் கொண்டு செடிகளை பிடுங்கும் போது ஒருநாள் தேவைப்படும் எனவும் கூறுகிறார்.
இதனால் வேலை செய்யும் நேரமும் குறைவாக இருக்கும் எனவும், வேலையாட்களுக்கு கொடுக்கின்ற பணத்தின் அளவும் குறையும் எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.
Company special
திரு ரிஷி அவர்களின் நிறுவனத்தில் கடலைக் செடிகளைப் பிடுங்குவதற்கு பயன்படும் இயந்திரத்தை உருவாக்கி உள்ளதாகவும், இந்த இயந்திரத்தின் மூலம் கடலைச் செடிகளை பிடுங்கும் போது அந்த இயந்திரம் மண்ணினுள் சென்று கடலை செடியை முழுவதுமாக பிடுங்கி வெளியில் போட்டு விடும் என கூறுகிறார்.
இவ்வாறு இந்த இயந்திரத்தைக் கொண்டு கடலை செடியை பிடுங்கும் போது 5 வேலை ஆட்கள் மட்டும் போதுமானது எனவும், ஒரு நாளில் ஒரு ஏக்கர் கடலை செடியை பிடுங்கி விடலாம் எனவும் கூறுகிறார்.
மேலும் இயந்திரத்தை சோதித்து பார்க்க கேட்கும் விவசாயிகளுக்கு இவர்கள் இயந்திரத்தை அளித்து வருவதாகவும்,திருவண்ணாமலை, காஞ்சிபுரம்,ஈரோடு,தாராபுரம், காங்கேயம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இவர்கள் இந்த இயந்திரத்தை சோதித்துப் பார்ப்பதற்கு அளித்து உள்ளதாக கூறுகிறார்.
மேலும் இவர்களுடைய நிறுவனத்தில் உள்ள கடலை பிடுங்கும் இயந்திரத்தில் உள்ள சிறப்பு மற்ற எந்த நிறுவனங்களிலும் இல்லை எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.
மேலும் இவர்களிடம் நெல் அடிக்கும் இயந்திரம், விவசாயத்திற்கு பயன்படும் கலப்பைகள், சுழலும் கருவி, மக்காச்சோளம் அடிக்கப் பயன்படும் இயந்திரம் போன்ற அனைத்து வகை தானியங்களையும் அடிக்கும் இயந்திரத்தையும் வைத்துள்ளதாகவும் கூறுகிறார்.
கடலைச் செடிகளிலிருந்து நிலக்கடலைகளை தனியாக பிரித்து எடுப்பதற்கும்,நிலக்கடலையில் இருந்து கடலையை தனியாக எடுப்பதற்கும் இயந்திரத்தை வைத்து உள்ளதாகவும்,இது போன்று பல இயந்திரங்களை தயாரித்து திரு ரிஷி அவர்கள் சிறப்பாக இவருடைய நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறுகிறார்.
மேலும் படிக்க:நன்னீர் முத்து வளர்ப்பில் அதிக லாபம்.
Get 450+ Extra Daily Visitors and 3X Your Profits
“How can I get more traffic to my site?”
People ask me this question all the time.
Truth be told, ranking on Google is getting *harder*,
because everyone and their grandma is targeting
the same keywords.
My friend George and his team just released a new
SEO WordPress plugin that fixes this problem.
It ranks your site higher in Google, without you
creating more content or building backlinks.
Check it out here ==> https://bit.ly/39swbCx