மிகக் குறைந்த விலையில் பண்ணைகளுக்கு தேவையான சோலார் மின் வேலிகள்.

கோயம்புத்தூரை சேர்ந்த திரு மனோஜ் திம்மையன் அவர்கள் மிகக்குறைந்த விலையில் ஒரு சோலார் மின்வேலி நிறுவனத்தினை வைத்து சிறப்பாக நடத்தி வருகிறார். அவரைப் பற்றியும் அவருடைய சோலார் மின்வேலி நிறுவனத்தைப் பற்றியும், அதனுடைய பயன்கள் பற்றியும் பின்வருமாறு ஒரு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

திரு மனோஜ் திம்மையன் அவர்களின் வாழ்க்கை

திரு மனோஜ் திம்மையன் அவர்கள் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். இங்கு இவர் பண்ணைகளுக்கு தேவையான ஒரு சோலார் மின் வேலியினை தயாரித்து வருகிறார்.

இந்த சோலார் மின் வேலியானது கம்பி வேலிகளை விட மிகவும் குறைந்த விலையே என கூறுகிறார். மற்றும் இவர் இந்த சோலார் மின்வேலி நிறுவனத்தினை 15 வருடங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டதாக கூறுகிறார்.

திரு மனோஜ் தின்மையன் அவர்கள் வாடிக்கையாளர்கள் கேட்கும் அனைத்து அளவுகளிலும், அனைத்து மின் வேலிகளையும் தயாரித்து அளிப்பதாக கூறுகிறார்.

திரு மனோஜ் திம்மையன் அவர்கள் இந்த மின் கம்பி வேலி தயாரிப்பினை மிகவும் சிறப்பான மற்றும் தரமான முறையில் தயாரித்து வருகிறார். மேலும் மின்கம்பிகள் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பண்ணைகளுக்கே சென்று மின் கம்பியினை அமைத்து தருவதாகவும் கூறுகிறார்.

மின்கம்பி வேலியின் தேவை மற்றும் முக்கியத்துவம்

பொதுவாக மக்கள் அனைவரும் அதிக அளவில் கோழிப்பண்ணை, மாட்டு பண்ணை, ஆட்டுப்பண்ணை மற்றும் தோட்டங்கள் ஆகியவற்றை வைத்து நடத்தி வருகின்றனர்.இதில் பொருட்களை அதிக அளவில் விளைவிப்பதை விட பண்ணையை பாதுகாப்பது அவசியமான ஒன்றாக உள்ளது.

அதிக பண்ணைகளில் தீங்கு விளைவிக்கக்கூடிய பாம்புகள், பன்றிகள், நாய்கள், காட்டெருமைகள், மான்கள், யானைகள் போன்ற விலங்குகள் பண்ணையிலுள்ள பயிர்களையும், பண்ணையையும் நாசம் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன எனவும் கூறுகிறார்.

மேலும் மலை அடிவாரங்களிலும் அதிகளவு விலங்கு தொல்லைகள் ஏற்படும் எனவும், ஊருக்குள்ளே திருடர்களினால் அதிகளவு பாதிப்பு ஏற்படும் எனவும் கூறுகிறார். இந்த பாதிப்புகளை எல்லாம் தடுப்பதற்கு சோலார் மின்வேலிகளை வைப்பது மிகவும் எளிதான வழி முறை எனவும் திரு மனோஜ் திம்மையன் அவர்கள் கூறுகிறார்.

இந்த சோலார் மின் வேலியானது அதிக விலையில் இருக்கும் என அதிக நபர்கள் நம்பி வருகிறார்கள். ஆனால் இந்த சோலார் வேலியானது கம்பி வேலிகளை விட மிகவும் குறைந்த விலையே ஆகும் என கூறுகிறார். இதனால் தோட்டத்திற்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

பொதுவாக வேலிகளை கம்பி வேலிகளாகவோ அல்லது செங்கல்கள் மூலம் சுவர்களாகவோ அமைக்க முடியும் எனவும், ஆனால் இந்த முறையில் வேலியை அமைத்தால் அந்த வேலியை தாண்டி மனிதர்களோ அல்லது விலங்குகளோ வருவதற்கு வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன எனக் கூறுகிறார்.

ஆனால் இந்த சோலார் மின் கம்பி வேலியினை அமைப்பதன் மூலம் அந்த வேலிகளை மனிதர்களோ அல்லது விலங்குகளோ தொட்டால் சிறிய அளவில் மின்சாரம் பாய்ந்து அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் எனவும் இதனால் யாரும் பண்ணைகளுக்கு உள்ளே வர யோசனை செய்வார்கள் திரு மனோஜ் திம்மையன் அவர்கள் கூறுகிறார்.

இதனால் இந்த சோலார் மின் கம்பி வேலியானது மிகவும் சிறப்பான ஒரு வழிமுறை எனவும் கூறுகிறார்.

சோலார் மின்கம்பி வேலிகளை பயன்படுத்தும் இடங்கள்

பொதுவாக சோலார் மின் கம்பி வேலிகளை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. காரணம் பாதிப்புகள் ஏதும் பண்ணைக்கு ஏற்படாத இடங்களில் இந்த சோலார் மின் கம்பி வேலிகளை அமைக்க வேண்டிய தேவை இல்லை என கூறுகிறார்.

ஆனால் இந்த மின்கம்பி வேலிகளை விலங்குகள் தாக்கும் இடங்களில் கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் எனவும் கூறுகிறார். ஏனெனில் விலங்குகள் தாக்கக் கூடிய இடங்களில் இந்த மின் கம்பி வேலிகள் இல்லை எனில் பண்ணையானது மிகவும் பாதிப்பு அடைவதற்கு வாய்ப்புள்ளது எனவும் திரு மனோஜ் திம்மையன் அவர்கள் கூறுகிறார்.

இந்த சோலார் மின் கம்பி வேலையினை அடுக்குமாடி குடியிருப்புகள், பண்ணை வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் அதிக அளவில் பயன்படுத்தலாம் எனவும் கூறுகிறார்.

பொதுவாக பல இடங்களில் யானைகளின் மூலம் மட்டும் பாதிப்புகள் ஏற்படும், மேலும் சில இடங்களில் பாம்புகளின் மூலம் மட்டும் பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறு ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு வகை பாதிப்புகள் ஏற்படும்.

எனவே ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஏற்ற வகையில் இந்த சோலார் மின் கம்பி வேலிகளை அமைக்க வேண்டும் எனவும் திரு மனோஜ் திம்மையன் அவர்கள் கூறுகிறார்.

பொதுவாக யானை தொந்தரவுகள் உள்ள இடங்களில் மின் கம்பி வேலிகளை தரையில் இருந்து ஒரு பத்து மீட்டர் உயரத்தில் வேலிகள் இருக்க வேண்டும் எனவும், கம்பிகளுக்கு இடையே இடைவெளி விட்டும் அமைத்திருக்க வேண்டும் எனவும், பாம்புகளின் மூலம் தொந்தரவுகள் ஏற்படக்கூடிய பண்ணைகளில் மின் கம்பி வேலிகளை தரையில் இருந்து சற்று உயரமாகவும் கம்பிகளுக்கு இடையில் குறைந்த அளவு மட்டும் இடைவெளி விட்டு அமைக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

மேலும் பன்றிகளின் மூலம் தொந்தரவுகள் ஏற்பட கூடிய பண்ணைகளுக்கு மூன்று மீட்டர் உயரத்திலேயே மின்கம்பி வேலினை அமைக்கலாம் எனவும், இந்த கம்பிகளில் 5 வரிசை கம்பிகளை மட்டும் அமைத்தால் போதுமானது எனவும் திரு மனோஜ் திம்மையன் அவர்கள் கூறுகிறார்.

இவ்வாறாக ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற அளவில் மின் கம்பி வேலிகளை தயாரித்து தருவதாகவும், இந்த முறையில் கம்பிகளை தயாரிப்பது மிக முக்கியமான ஒன்று எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த அனைத்து பாதிப்புகளும், அனைத்து விலங்குகளாலும் ஒரே இடங்களில் ஏற்படுகிறது என்றால் அந்த அனைத்து விலங்குகளையும் தடுப்பதற்கு ஒரு மின் கம்பி வேலியை தயாரித்து வருவதாகவும் கூறுகிறார்.

ஆனால் இந்த முறையில் அனைத்து விலங்குகளாலும் பண்ணைகளுக்கு ஏற்படும் பாதிப்பானது மிகக் குறைந்த இடங்களில் மட்டுமே இருப்பதாக கூறுகிறார். அதிக இடங்களில் சில விலங்குகளால் மட்டுமே பாதிப்பு ஏற்படும் எனவும் கூறுகிறார்.

எனவே இந்த மின்கம்பி வேலியை அனைத்து இடங்களிலும், அனைத்து பண்ணைகளுக்கும், அனைத்து தோட்டங்களுக்கும் பயன்படுத்துவது மிகவும் முக்கியமான ஒன்றாகும் என திரு மனோஜ் திம்மையன் அவர்கள் கூறுகிறார்.

மின்கம்பி வேலியின் பாதுகாப்பு முறை

இந்த மின் கம்பி வேலியை ஒருவர் தொடும் போது அவர்கள் இறப்பதற்கு வாய்ப்பு இல்லை எனவும் கூறுகிறார். ஏனெனில் இந்த சோலார் மின்கம்பி வேலியில் மின்சாரமானது ஒரு நிமிடம் விட்டு ஒரு நிமிடம் வருவதாக கூறுகிறார்.

இந்த முறையில் மின்சாரம் வருவதால் மனிதர்களோ அல்லது விலங்குகளோ இந்த சோலார் மின்கம்பி வேலிகளை தொடும் போது அவர்களுக்கு அது பயத்தை மட்டுமே ஏற்படுத்தும் எனவும் இதனால் அவர்களின் உயிர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் இரு மனோஜ் திம்மையன் அவர்கள் கூறுகிறார்.

பொதுவாக பல இடங்களில் AC மின் ஓல்ட்யை மின் கம்பிகளில் பயன்படுத்தி வருகின்றன. இந்த முறையில் பயன்படுத்தினால் நிச்சயமாக உயிரிழப்புகளுக்கு வாய்ப்புகள் உண்டு எனக் கூறுகிறார். ஆனால் திரு மனோஜ் திம்மையன் அவர்கள் பயன்படுத்தும் சோலார் மின்கம்பி வேலிகளில் DC மின் ஓல்ட்யை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார். இதனால் உயிரிழப்புகளுக்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறுகிறார்.

இந்த முறையில் மின்சாரத்தை பயன்படுத்துவதால் விலங்குகளுக்கு அது வலியையும், பயத்தையும் மட்டுமே அளிக்கும் எனவும் இதனால் அந்த உயிரினங்கள் இறப்பதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறுகிறார்.

அரசாங்க விதிமுறைகளின்படி இந்த சோலார் மின் கம்பி வேலையிலிருந்து வெளிவரும் மின்சார ஓல்ட் ஆனது 9.9kv க்கு மேலே செல்ல கூடாது எனவும்,9.9 Kv க்கு குறைவாகவே இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார். இந்த நிலையை மின்சார கம்பிகள் தாண்டியது என்றால் அது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் திரு மனோஜ் திம்மையன் அவர்கள் கூறுகிறார்.

மேலும் பண்ணையில் உள்ள ஆடுகளும் ,மாடுகளும் தெரியாமல் இந்த சோலார் மின் கம்பி வேலியினை தொட்டுவிட்டால் கூட அவைகளுக்கு முதலில் மின்சாரமானது சிறிதளவு பாய்ந்து விடும் எனவும், இந்த செயலானது அவைகளை பயமுறுத்தி விட்டால் மீண்டும் அது வேலியை தொடாது எனவும் கூறுகிறார்.

சோலார் மின்கம்பி வேலியின் செயல்முறை

திரு மனோஜ் திம்மையன் அவர்களின் பண்ணையில் 100votls சூரிய தகடினை வைத்துள்ளதாக கூறுகிறார். இந்த சூரிய தகடில் இருந்து பிளஸ் மற்றும் மைனஸ் இணைப்புகளை பேட்டரியுடன் இணைத்து உள்ளதாக கூறுகிறார்.

இதன் மூலம் இந்த சோலார் தகடிலில் இருந்து மின்சாரமானது பேட்டரியில் நிரம்பி விடும் என கூறுகிறார். இந்த பேட்டரியில் இருந்து மற்றொரு பேட்டரிக்கு மின்சாரமானது சென்று அதிலிருந்து சரியான அளவுகளில் மின்சாரத்தை மின்கம்பி வேலிகளுக்கு அளிப்பதாக கூறுகிறார்.

மேலும் இந்த சோலார் மின்கம்பி வேலிகளில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதை அறிந்து கொள்ள சோலார் அமைப்பில் ஒரு அலாரத்தை அமைத்துள்ளதாகவும் கூறுகிறார்.

சிலர் இந்த சோலார் பேட்டரி பெரிய அளவில் இருந்தால்தான் அதில் மின்சாரத்தை சரியாக செயல்படுத்த முடியும் என எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த சோலார் பேட்டரி ஆனது சிறிய அளவில் இருந்தால் கூட மின்சாரமானது சரியாக செயல்படும் எனவும் கூறுகிறார்.

ஊட்டி போன்ற குளிரான இடங்களில் மட்டும் பேட்டரியின் அளவை பெரிய அளவில் வைத்துக் கொள்வது சிறந்தது எனவும் கூறுகிறார்.

திரு மனோஜ் திம்மையன் அவர்களின் சோலார் மின்கம்பியின் சிறப்பு

திரு மனோஜ் திம்மையன் அவர்களின் சோலார் அமைப்பில் பல சிறப்பான வழிமுறைகளையும் அமைத்து உள்ளார். அதில் ஒன்று இப்பொழுது பண்ணையை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை எனில் தொலைபேசியின் மூலம் ஒரு எண்ணிற்கு அழைத்தால் இந்த சோலார் அமைப்பானது ஆன் ஆகிவிடும். மீண்டும் அதே எண்ணிற்கு அழைத்தால் அது ஆப் ஆகி விடும் எனவும் கூறுகிறார்.

இந்த முறையினை இவர் இந்த சோலார் அமைப்பில் உருவாகியுள்ளதாகவும் கூறுகிறார்.இந்த சோலார் மின்வேலியை இரண்டு ஏக்கருக்கு அமைத்தால் 70 ஆயிரம் வரை செலவாகும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த மின்கம்பி வேலிகளில் செடிகள் ஏதும் வளராமல் பார்த்துக்கொள்வது மிகவும் நல்லது எனவும் கூறுகிறார்.மேலும் இந்த மின்கம்பி வேலிகளை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இவரே மின்கம்பி வேலிகளை அமைத்து தருவதாகவும் கூறுகிறார்.

திரு மனோஜ் திம்மையன் அவர்கள் இந்த சோலார் மின்வேலி கம்பிகளை மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்.

மேலும் படிக்க:காளான் உற்பத்தியில் அசத்தும் இளைஞர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply