பண்ணைகளுக்கு பயன்படுத்தப்படும் சிறப்பான தடுப்பு வலை.

ஈரோடு மாவட்டத்தில் மிக சிறப்பான முறையில் இயங்கி வருகின்ற VJ Tarpaulin என்னும் நிறுவனத்தை திரு ஆனந்த் அவர்கள் நடத்தி வருகிறார். இவர் இவருடைய நிறுவனத்தில் பண்ணைகளுக்கு பயன்படுத்தப்படும் தடுப்பு வலையை மிகவும் தரமான முறையில் தயாரித்து வருகிறார். இவரைப் பற்றியும், தடுப்பு வலையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

Startup of the company

திரு ஆனந்த் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் வசித்து வருவதாகவும், இவர் இங்கு பண்ணைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தை வைத்து மிக சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.

இவருடைய நிறுவனத்தின் பெயர் VJ Tarpaulin எனவும், இவருடைய நிறுவனத்தில் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களும் மிக தரமான முறையிலேயே இருக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் இந்த நிறுவனத்தை இவருடைய நண்பருடன் சேர்ந்து நடத்தி வருவதாகவும், பண்ணைகளுக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்து அதனை மிக சிறப்பான முறையில் விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

இவர் இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களையும் மிக தரமான முறையில் உற்பத்தி செய்து பண்ணையாளர்களுக்கு மற்றும் விவசாயிகளுக்கும் அளித்து வருவதாக கூறுகிறார்.

தடுப்பு வலையின் பயன்கள்

அனைத்து வகை பண்ணைகளுக்கும் இந்த தடுப்பு வலையை பயன்படுத்த முடியும் எனவும், இந்த தடுப்பு வலை மிக தரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது, இதனை பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பாக இருக்கும் எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.

இதனை கோழிப்பண்ணை,வாத்து பண்ணை மற்றும் ஆட்டுப்பண்ணை ஆகிய மூன்று பண்ணைகளுக்கும் பயன்படுத்த முடியும் எனவும், மேலும் வேறு சில பயன்களுக்கும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.

மேலும் இதில் அடர்த்தி அதிகமான வலை மற்றும் அடர்த்தி குறைவான வலை என்று இரண்டு வகையில் வலைகள் இருப்பதாகவும், அடர்த்தி அதிகமான வலையை ஆட்டுப்பண்ணைைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், அடர்த்தி குறைவான வலையை கோழிப்பண்ணைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த வலையை தடுப்பு வலைகளாக மட்டும் பயன்படுத்தாமல் பண்ணையின் கொட்டகை போன்ற அமைப்புக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும், இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் பருந்துகளிடமிருந்து கோழிகளை பாதுகாக்க முடியும் எனவும் கூறுகிறார்.

Types of webs

திரு ஆனந்த் அவர்களின் நிறுவனத்தில் மொத்தமாக நான்கு வகைகளில் தடுப்பு வலைகள் இருப்பதாகவும், அவைகள் 0.5 mm ,1.0 mm,1.5 mm மற்றும் 2.0 mm ஆகிய அளவுகளில் வலைகள் இருப்பதாகவும் கூறுகிறார்.

மற்றும் ஒரு இன்ச் அளவுள்ள தடுப்பு வலையை கோழி பண்ணைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், இரண்டு இன்ச் அளவுள்ள தடுப்பு வலையை ஆட்டுப்பண்ணைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.

ஒரு இன்ச் அளவுள்ள தடுப்பு வலையை கோழி பண்ணைக்கு அமைப்பதற்கு காரணம் இரண்டு இன்ச் அளவுள்ள தடுப்பு வலையை கோழிப் பண்ணைக்கு அமைக்கும் போது அந்த வலையில் கோழிக் குஞ்சுகள் வெளியில் வந்து விடும் எனவும், ஆனால் ஒரு இன்ச் அளவுள்ள தடுப்பு வலையை கோழிப்பண்ணைக்கு அமைக்கும் போது கோழிக்குஞ்சுகள் வெளியில் வராது எனவும் கூறுகிறார்.

மேலும் இவ்வாறு ஒரு இன்ச் அளவுள்ள தடுப்பு வலையை கோழி பண்ணைக்கு அமைக்கும் போது மிகவும் பாதுகாப்பாக இருக்கும் எனவும், பாம்புகள் போன்ற தீங்கு விளைவிக்கக்கூடிய விலங்குகள் எதுவும் வர முடியாது எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.

மற்றும் இவர்களுடைய நிறுவனத்தில் இந்த தடுப்பு வலைகள் 10 அடி உயரம் வரை இருப்பதாகவும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப வலைகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.

வலையை அமைக்கும் முறை

தடுப்பு வலையை கோழி பண்ணைக்கு அமைக்கும் போது 6 அடி உயரத்தில் அமைக்க வேண்டும் எனவும்,வாத்து பண்ணைக்கு தடுப்பு வலையை அமைக்கும் போது 3 அடி உயரத்தில் அமைக்க வேண்டும் எனவும், ஆட்டுப்பண்ணைக்கு தடுப்பு வலையை அமைக்கும் போது 10 அடி உயரத்தில் அமைக்க வேண்டும் எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த தடுப்பு வலையை பண்ணையில் அமைக்கும் போது தடுப்பு வலையின் மேலேயும் , கீழும் நாடா போன்ற அமைப்பை கோர்க்க வேண்டும் எனவும், இவ்வாறு வலையில் கோர்த்ததற்குப் பிறகு தான் வலையினை பண்ணையில் அமைக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

மேலும் இவ்வாறு வலையில் நாடாவை கோர்க்காமல் சிலர் பண்ணையில் வலையை அமைப்பார்கள் எனவும், ஆனால் இந்த முறையில் செய்வது மிக தவறான ஒன்று எனவும், சிலர் இந்த வலையில் நாடாவிற்கு பதிலாக கம்பியை கட்டுவார்கள் எனவும் இந்த முறையும் தவறானது எனவும் கூறுகிறார்.

மேலும் நாய்கள் மற்றும் கீரிகளிடமிருந்து கோழிகள் மற்றும் வாத்துக்களை பாதுகாப்பதற்கு தடுப்பு வலையை மண்ணில் புதைத்தவாறு அமைத்துக் கொள்ளலாம் எனவும், இவ்வாறு தடுப்பு வலையை மண்ணில் புதைக்கும் போது நாய்கள் மற்றும் கீரிகள் பண்ணைக்குள் வராது எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.

Web selection method

இந்த தடுப்பு வலையை தொடர்ந்து மூன்றிலிருந்து நான்கு வருடங்கள் எந்த பாதிப்புமின்றி பயன்படுத்த முடியும் எனவும், நான்கு வருடங்கள் வரை இந்த தடுப்பு வலை எந்த பாதிப்பையும் அடையாது எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.

தடுப்பு வலையை வாங்கும் போது புதியதாக இருக்கும் வலையை மட்டுமே வாங்க வேண்டும் எனவும், பயன்படுத்தப்பட்ட வலை மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக அந்த வலையை வாங்கக் கூடாது எனவும் கூறுகிறார்.

ஏனெனில் பயன்படுத்தப்பட்ட வலையை வாங்கும்போது அந்த வலையின் தரமானது மிகக் குறைவாகவே இருக்கும் எனவும், இதனால் வலை விரைவில் பாதிப்படைந்து விடும் எனவும் கூறுகிறார்.

இதனால் பயன்படுத்தப்பட்ட வலையை மிகக் குறைந்த விலையில் வாங்குவதை விட, புதியதாக தயாரிக்கப்பட்ட வலையை வாங்குவதன் மூலம் அந்த வலையின் தரம் மிக சிறப்பாக இருக்கும் எனவும், வலையின் ஆயுட்காலமும் அதிக நாட்கள் இருக்கும் எனவும் கூறுகிறார்.

எனவே வலையினை வாங்கும் போது சரியான முறையில் மற்றும் தரமாக இருக்கும் வலையை பார்த்து வாங்க வேண்டும் எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.

விற்பனை முறை

திரு ஆனந்த் அவர்கள் இவருடைய நிறுவனத்தில் வலையை வாங்கி வலைகளை விற்பனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தடுப்பு வலையை லாரிகளின் மூலம் அனுப்புவதாகவும், போக்குவரத்து மற்றும் கொரியர் முறையில் அனுப்புவதில்லை எனவும் கூறுகிறார்.

போக்குவரத்து மற்றும் கொரியர் முறையில் அனுப்பும் போது அதிக அளவு பணம் செலவாகும் எனவும், இதன் காரணமாகவே இவர்கள் இந்த தடுப்பு வலையை லாரிகள் மூலம் அனுப்பி வருவதாக கூறுகிறார்.

முள்கம்பி வேலி மற்றும் இந்த தடுப்பு வலை ஆகிய இரண்டின் ஆயுட்காலமும் ஒரே அளவில் இருப்பதாகவும், ஆனால் முள் கம்பி வேலியை விட இந்த தடுப்பு வலையின் விலை குறைவாகவே இருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த தடுப்பு வலையை தேவைக்கு ஏற்ப பண்ணையில் மாற்றிக் கொள்ள முடியும் எனவும், இந்த தடுப்பு வலையை மிக தரமான முறையில் உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்து வருவதாக திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.

மேலும் படிக்க;அரசின் இலவச நீர்த்தேக்க தொட்டி.

Leave a Reply