ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் வண்ண மீன்கள் வளர்ப்பினை செய்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய வண்ண மீன்கள் வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
The beginning of the breeding of colored fish
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் வண்ண மீன்கள் வளர்ப்பினை செய்து வருவதாக கூறுகிறார்.
இவர் இவரது பட்டப் படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், அந்த வேலையில் இவருக்கு அதிக அளவில் ஆர்வம் இல்லாத காரணத்தினாலும் குறைந்த அளவு சம்பளம் கிடைப்பதாலும், தாமே ஒரு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த வண்ண மீன்கள் வளர்ப்பினை தொடங்கியதாக கூறுகிறார்.
இப்பொழுது இவர் இரண்டு இடங்களில் வண்ண மீன்கள் கடை வைத்து நடத்தி வருவதாகவும் முதலில் இவர் ஒரு கடை மட்டும் வைத்திருந்ததாகவும், பின்பு தொழிலில் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட இவர் மற்றொரு கடையை தொடங்கியதாக கூறுகிறார்.
இந்த வண்ண மீன்கள் வளர்ப்பினை வீட்டிலும் குறைந்த இடத்திலேயே வைத்து சிறப்பான முறையில் வளர்க்க முடியும் எனவும், இப்பொழுது இவர் இந்த வண்ண மீன்கள் கடையை மிக சிறப்பான முறையில் நடத்தி வருவதாகக் கூறுகிறார்.
மீன்களின் வகைகள்
வண்ணமீன்கள் வளர்ப்பினை இவர் மிக சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், மீன்களை மிகுந்த பராமரிப்புடன் பராமரித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
இவருடைய வண்ண மீன் கடையில் இப்பொழுது 500க்கும் மேற்பட்ட வகைகளில் வண்ண மீன்களை இவர் வைத்திருப்பதாகவும் இந்த அனைத்து வகை வண்ண மீன்களும் இறக்குமதி செய்யப்பட்ட வண்ணமீன்கள் எனவும், இவரிடம் உள்ள எந்த மீன்களும் நம்முடைய மீன் வகைகள் இல்லை எனவும் கூறுகிறார்.
ஏனெனில் அதிகமாக மக்கள் விரும்பி வாங்குவது இறக்குமதி செய்யப்பட்ட வண்ணமீன்கள் எனவும், இதன் காரணமாகவே இவர் இறக்குமதி செய்யப்பட்ட வண்ண மீன்களை மட்டுமே வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் தரம் அதிகமாக இருக்கும் மீன்களை வளர்த்து வருவதாகவும் இந்த மீன்களை இவர் குறைந்த விலைக்கே விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
பெரும்பாலான வண்ண மீன்கள் கடைகளில் குறைந்த அளவிலேயே மீன்களை வைத்து வளர்ப்பார்கள் எனவும் ஆனால் இவருடைய வண்ண மீன்கள் கடையில் 500க்கும் மேற்பட்ட வண்ண மீன்களை வைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
ஏனெனில் இந்த அளவுகளில் வண்ண மீன்களை வளர்த்தால் தான் கடை நல்ல முறையில் நடக்கும் எனவும் மீன்களும் விரைவில் வளர்ந்து அதிக அளவில் லாபத்தை தரும் எனவும் கூறுகிறார்.
Uses of colored fish
வண்ண மீன்கள் வளர்ப்பில் பலவித பயன்கள் இருப்பதாகவும் அதிக அளவு வாடிக்கையாளர்கள் இந்த வண்ண மீன்களை வாஸ்து சரியாக இருப்பதற்கு வாங்கி செல்வதாக கூறுகிறார்.
இந்த மீன்களை நமது வீட்டில் வளர்த்தால் வீட்டில் எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாது எனவும், அமைதியான மனநிலை நமக்கு கிடைக்கும் என்ற எண்ணத்திலும் அதிக அளவு மக்கள் இந்த மீன்களை வாங்கி வளர்ப்பதாக கூறுகிறார்.
முக்கியமாக இந்த மீன்களை நமது வீட்டில் வளர்த்தால் நாம் கோபமாக இருக்கும் போது இந்த மீன் நமது கோபத்தை குறைக்கும் எனவும் நம்முடன் இந்த மீன்கள் விளையாடும் எனவும் கூறுகிறார்.
ஒன்பது மணி நேரம் ஒருவர் தொடர்ந்து வேலை செய்து கொண்டு வீட்டிற்கு வருகிறார் என்றால் வீட்டிற்கு வந்த பிறகு இந்த மீன்களுடன் விளையாடினால் மன நிம்மதி அவருக்கு கிடைக்கும் என கூறுகிறார்.
மேலும் அதிக அளவு மக்கள் இந்த மீன்களை விரும்பி வாங்குவதற்கு காரணம் இதனுடைய நிறம் மற்றும் அழகு அனைவரையும் கவரும் வகையில் இருப்பதாலும், இந்த மீன்கள் சுறுசுறுப்பாக இருப்பதாலும் அதிக அளவு மக்கள் இந்த மீன்களை விரும்பி வாங்கி வளர்த்து வருவதாக கூறுகிறார்.
இந்த முறையில் இந்த வண்ண மீன்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருவதாகவும் இதில் அதிக பயன் இருப்பதாகவும் கூறுகிறார்.
மீன்களின் வளர்ப்பு முறை
வண்ண மீன்களை இவர் மிக சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும், மீன்கள் சிறப்பான முறையில் அதிக இடத்தில் வளர்வதற்கு இவர் பெரிய அளவிலான கண்ணாடித் தொட்டியை வாங்கி அதில் மீன்களை விட்டு வளர்த்து வருவதாக கூறுகிறார்.
இந்த மீன்களை இவர் இனப்பெருக்கம் செய்வதில்லை எனவும் அனைத்து மீன்களையும் இவர் இறக்குமதி செய்து வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.
ஏனெனில் இவரிடம் உள்ள இந்த வண்ண மீன்களை நாம் இனப்பெருக்கம் செய்ய முடியாது எனவும் அதனை இறக்குமதி செய்து மட்டுமே வாங்க முடியும் எனவும் கூறுகிறார்.
வேறு வகை மீன்களை நாம் இனப்பெருக்கம் செய்ய முடியும் எனவும் ஆனால் இந்த வகை மீன்களை இனப்பெருக்கம் செய்வது கடினமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
மீன்கள் கடலில் எவ்வளவு சுதந்திரமாக வாழுமோ அந்த முறையில் வாழ்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் இவர் மீன்களுக்கு செய்து உள்ளதாகவும், இதனால் மீன்கள் சிறப்பான முறையில் வளர்ந்து வருவதாக கூறுகிறார்.
Immunization and feeds
மீன்களுக்கு நோய் தொற்று ஏற்படும் எனவும், இவ்வாறு நோய்த்தொற்று மீன்களுக்கு ஏற்படுவதற்கு முன்பே அதனை இவர் சரி செய்து கொள்வதாக கூறுகிறார்.
மீன்களை இறக்குமதி செய்து வாங்கி வந்த பிறகு ஒவ்வொரு மீன்களையும் தனித்தனி தொட்டிகளில் வைத்து வளர்ப்பதாகவும், இந்த மீன்கள் சிறிது நாட்கள் இந்திய நீரில் வளரும் வரை அதனை தனியான ஒரு தொட்டியில் வைத்து வளர்ப்பதாக கூறுகிறார்.
இவ்வாறு இந்த மீன்கள் இந்திய நீரில் வளர்வதற்கு சரியான தகுதியை பெற்ற பிறகு அதனை விற்பனைக்கு இவர் வைப்பதாக கூறுகிறார்.
ஏனெனில் இந்திய நீரில் இந்த மீன்கள் வளர்வதற்கு தகுதி அடைவதற்கு முன்பு இந்த மீன்களை விற்றால் வாடிக்கையாளர்கள் அவருடைய வீட்டில் வைத்து வளர்க்கும் போது அந்த மீன்களுக்கு ஏதாவது நோய் தொற்று ஏற்பட்டு அந்த மீன்கள் இறந்து விடும் என கூறுகிறார்.
எனவே மீன்களுக்கு எந்தவித நோய்த்தொற்றும் ஏற்படாத வகையில் மீன்களை வளர்த்து அந்த மீன்களை மட்டுமே இவர் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் மீன்களுக்கு உணவாக பயன்படும் சத்து நிறைந்த உணவுகள் அனைத்தையும் இவர் அளித்து வருவதாகவும் இதனால் மீன்கள் சிறப்பாக வளர்ந்து வருவதாக கூறுகிறார்.
விற்பனை முறை மற்றும் லாபம்
வண்ண மீன்களை இவர் சமூக வலைத்தளங்களின் மூலமும் மற்றும் நேரடியாகவும் விற்பனை செய்து வருவதாகவும், நல்ல தரமான மீன்களை மட்டுமே இவர் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் தரமான முறையில் மீன்களை வளர்த்து அதனை விற்பனை செய்து வருவதால் அதிக அளவு வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து மீன்களை வாங்கி செல்வதாகவும், இதன் மூலம் இவர் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் இந்த வண்ணமீன்கள் வளர்ப்பினை தரமான முறையில் மிகுந்த பராமரிப்புடன் வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் படிக்க:நோனி பழம் சாகுபடியில் சிறந்த லாபம்