மாட்டுப்பண்ணைக்கு பயன்படுத்தப்படும் சிறப்பான பாய் உற்பத்தி.

ஈரோடு மாவட்டத்தில் மிக சிறப்பான முறையில் மாட்டு பண்ணைக்குத் தேவையான பாய்கள் தயார் செய்யும் நிறுவனம் ஒன்றை திரு ஆனந்த் அவர்கள் இயங்கி வருகிறார், இந்த நிறுவனத்தைப் பற்றியும், நிறுவனத்தில் தயார் செய்யப்படும் தார்ப்பாய்கள் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

VJ Tarpaulin company

திரு ஆனந்த் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் மிகவும் சிறப்பான முறையில் VJ Tarpaulin என்னும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், இந்த நிறுவனத்தில் மாட்டுப் பண்ணைக்கு பயன்படுத்தப்படும் பாயினை தயாரித்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய நிறுவனத்தின் மாட்டுப் பண்ணைக்கு பயன்படுத்தப்படும் பாயினை மட்டும் தயாரிக்காமல் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களையும் தயாரித்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் திரு ஆனந்த் அவர்களுடன் சேர்ந்து இவருடைய நண்பரும் இந்த நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், இதனால் இவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து இந்த நிறுவனத்தை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும், விவசாயம் செய்வதற்கும் மற்றும் பண்ணை அமைப்பதற்கும் தேவையான அனைத்து பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வருவதாகவும் கூறுகின்றார்.

மாட்டுப் பண்ணைக்கு பயன் படுத்தப்படும் பாயின் முக்கியத்துவம்

மாட்டு பண்ணையில் வளர்க்கப்படும் மாடுகளை முன்பெல்லாம் வெறும் தரையில் கட்டி வைத்து வளர்த்து வந்தனர் எனவும், இப்பொழுது இந்த மாட்டு பண்ணையில் மாடுகளுக்கு பாயினை அளித்து வருகின்றனர் எனவும், இன்றுள்ள நிலையில் அதிக அளவில் மாடுகளுக்கு இவ்வாறு பாய்களின் தேவை இருந்து வருவதாகவும் கூறுகிறார்.

இவ்வாறு மாட்டுப் பண்ணைக்கு பாயினை போடுவதற்கு காரணம் மாடுகள் வெறும் தரையில் படுக்கும் போது மாடுகளின் முட்டிகள் ஆனது பாதிப்படைந்து விடும் எனவும், இந்த பாதிப்பை குறைப்பதற்கு பண்ணையில் பாயினை பயன்படுத்துவதாகவும், இந்தப் பாயினை பண்ணையில் வைத்து பயன்படுத்தினால் மாடுகளுக்கு முட்டிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறுகிறார்.

மேலும் மாடுகளை வெறும் தரையில் கட்டும் போது மாட்டின் காம்புகளில் கற்கள் பட்டு புண்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும், ஆனால் இந்த பாயின் மீது மாடுகள் படுக்கும் போது அவ்வாறு எந்த வகையிலும் புண்கள் ஏற்படாது எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.

மேலும் காங்கிரட் அமைத்த இடத்தில் மாட்டினை கட்டும் போது மாடானது நின்றுகொண்டே இருக்குமெனவும், ஆனால் அந்த கான்கிரட்டின் மீது இந்த பாயினை போடும் போது மாடுகள் அதன்மீது படுத்துக் கொள்ளும் எனவும், இவ்வாறு மாடுகள் நின்றுகொண்டே இல்லாமல் படுத்து கொண்டு இருந்தால் அதிக அளவில் நமக்கு பால் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த பாயின் மீது மாடுகள் படுக்கும் போது குளிர் மற்றும் வெயில் தரையில் இருந்து மாடுகளைத் தாக்காது எனவும், மேலும் இதனை பயன்படுத்தினால் பண்ணையை சுத்தம் செய்வது மிகவும் சுலபமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

Method of using mat

திரு ஆனந்த் அவர்கள் இந்த தார்ப்பாய் கள் மற்றும் பண்ணைக்கு பயன்படுத்தப்படும் மாட்டுப் பாய்கள் போன்றவற்றை மிகவும் சிறப்பான முறையில் தயாரித்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இந்த பாயினை அனைத்து வகை மாடுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், காங்கிரட் அமைத்த பண்ணைகளில் இந்தப் பாயிலை பயன் படுத்துவது மிகவும் முக்கியமான ஒன்று எனவும் கூறுகிறார்.

மேலும் இந்தப் பாயினை மாட்டுப் பண்ணைக்கு மட்டும் பயன்படுத்தாமல், பண்ணையில் வைத்து வளர்க்கும் அனைத்து விலங்குகளுக்கும், உதாரணமாக எருமை மற்றும் குதிரை போன்ற விலங்குகளுக்கும் இந்தப் பாயினை பயன்படுத்தலாம் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்தப் பாயினை கன்று குட்டிகளுக்கு பயன்படுத்தலாம் எனவும், ஆனால் அதிக அளவில் கன்று குட்டிக்கு இந்தப் பாயினை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.

உற்பத்தி முறை மற்றும் பாயின் அளவு முறை

திரு ஆனந்த் அவர்களும் அவருடைய நண்பரும் ஒன்றாக இணைந்து மாட்டு பண்ணைக்கு பயன்படுத்தப்படும் பாயினை மிகவும் சிறப்பான முறையில் தயாரித்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இந்தப் பாயினை ஒரு மாட்டுப் பண்ணைக்கு பயன்படுத்துகிறோம் என்றால் அதனைத் தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி பயன்படுத்தலாம் எனவும், ஆறு வருடங்கள் வரை இந்தப் பாயானது பாதிப்படைவதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த பாயினை 6 அடி நீளமும் 4 அடி அகலத்தையும் கொண்டு அமைத்து உள்ளதாகவும், இந்த அளவு முறையில் அமைத்து இருப்பது ஒரு மாடு படுப்பதற்கு சரியான முறையில் இருக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்தப் பாயானது மிகவும் தடிமன் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த முறையில் இந்த மாட்டுப் பாயினை அமைத்து உள்ளதால் இந்த பாய் ஆனது எந்த பாதிப்புமின்றி இருக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் பெரிய பண்ணையில் அதிகளவு மாடுகளை வைத்து வளர்ப்பவர்கள் இந்த பாயினை பயன்படுத்தும் போது ஒவ்வொரு மாட்டிற்கும் தனித்தனியாக பாயினை போடுவது சிரமமாக இருக்கும் என்பதற்காக, ஒரு பாயுடன் மற்றொரு பாயை சேர்க்கும் வகையில் பாயினை அமைத்து இருப்பதாகவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.

மற்றும் குறைந்த அளவு மாடுகள் வைத்து வளர்ப்பவர்கள் ஒவ்வொரு மாட்டிற்கும் தனித்தனியாக பாயினை போட வேண்டும் என்று கேட்டால் அந்த முறையிலும் பாயினை தயாரித்து உள்ளதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த பாயினை மாட்டுப் பண்ணைக்கு பயன்படுத்தும் போது பண்ணையில் எந்தவித துர்நாற்றமும் வராது எனவும், இதனை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.

Sales method and price

மாட்டுப் பண்ணையில் இந்த பாயினை பயன்படுத்துவதனால் மாடுகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது எனவும், மிகவும் பாதுகாப்பான முறையிலேயே மாடுகள் இருக்கும் எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர்கள் ஒன்றோடொன்று இணைக்கும் பாயினை 2950 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும், மற்றும் ஒன்றோடொன்று இணைக்காமல் தனியாக இருக்கும் பாயினை 2700 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர்கள் இந்தப் பாயினை தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருவதாகவும், அதிக அளவு இந்தப் பாயினை வாங்கும் வாடிக்கையாளர்கள் புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் ஆகிய பகுதிகளிலிருந்து எனவும் கூறுகிறார்.

மேலும் வாடிக்கையாளர்கள் இவரிடம் தொடர்பு கொண்டு பாய்கள் வேண்டும் என்று கேட்டால் அவற்றை போக்குவரத்து முறையில் அனுப்பி வைப்பதாக திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.

மேலும் தமிழ்நாட்டில் இப்பொழுது தான் இந்த பாய்களை அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வாங்குகிறார்கள் எனவும், இதற்கு முன் கர்நாடகா பகுதிகளில் மட்டுமே இந்த பாய்களை அதிக அளவு வாடிக்கையாளர்கள் வாங்கினார்கள் எனவும் கூறுகிறார்.

மேலும் இதனை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது ஒரு பெரிய பேக்கிங் செய்யும் கவரில் போட்டு அனுப்புவதாகவும், இந்த முறையில் அனுப்பும்போது அவர்களுக்கு அது மிகவும் பாதுகாப்பான முறையில் சென்று விடுவதாகவும் கூறுகிறார்.

திரு ஆனந்த் மற்றும் அவருடைய நண்பர் ஒன்றாக இணைந்து இந்த மாட்டுப் பண்ணைக்கு பயன்படுத்தப்படும் பாய், விவசாயம் மற்றும் பண்ணைகளுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களையும் மிகவும் சிறப்பான முறையில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க:பள்ளி மைதானத்தில் இயற்கை விவசாயம்.

தமிழ் கவிதைகள்…….

எனக்கு மட்டுமே கேட்கும்
அவள் குரலை தொடர்கிறேன்.
எனக்கு மட்டுமே சொந்தமென
காற்றையும் கட்டி அணைக்கிறேன்.

Read more: தமிழ் கவிதைகள்

Leave a Reply