தலைச்சேரி ஆட்டுப்பண்ணை வளர்ப்பு.

திரு அருண் என்பவர் தலைச்சேரி ஆட்டுப் பண்ணையை வைத்து சிறப்பாக நடத்தி வருகிறார். அவரையும் அவருடைய ஆட்டுப் பண்ணையில் உள்ள ஆடுகளைப் பற்றியும், வளர்க்கும் விதம் மற்றும் அதனுடைய சிறப்புகளைப் பற்றி பின்வருமாறு விரிவாக கட்டுரை வடிவில் காணலாம்.

தலைச்சேரி ஆடுகள்

திரு அருண் அவர்கள் தலைச்சேரி ஆட்டுப் பண்ணையை வைத்து சிறப்பாக நடத்தி வருகிறார். இந்த ஆட்டுப்பண்ணையால் இவருக்கு அதிக நன்மை மற்றும் வருமானம் வருவதாகவும் கூறுகிறார்.

பொதுவாக சந்தை மற்றும் கடைகளில் அதிக அளவு வெள்ளாடுகள் மட்டுமே உள்ளன. தலைச்சேரி ஆடுகள் அதிக இடங்களில் காணப்படுவதில்லை. தலைச்சேரி ஆடு வளர்ப்பில் அதிகளவு வருமானத்தை பெறலாம் எனவும் திரு அருண் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த தலைச்சேரி ஆடுகளை தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் அவை பண்ணைகளுக்கு செல்லும் முறை மற்றும் அவற்றின் பயன் போன்றவற்றைப் பற்றியும் திரு அருண் அவர்கள் கூறியுள்ளார்.

மற்றும் கொங்கு மண்டலங்களில் தூய்மையான வெள்ளை நிற ஆடுகளுக்கு அதிக அளவு வரவேற்பு உள்ளது எனவும் கூறுகிறார்.

ஆடுகளை தேர்ந்தெடுக்கும் முறை

பொதுவாக ஆடுகளை தேர்ந்தெடுக்கும் போது நான்கு மாதத்தில் உள்ள குட்டிகளின் காம்புகள் நீளமாக இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும் என கூறுகிறார்.

ஏனெனில் நான்கு மாதத்தில் உள்ள ஆட்டுக்குட்டிகளின் காம்புகள் நீளமாக இருந்தால் அது வளரும் போது நல்ல நிலையிலும், ஆடுகள் வளர வளர அவற்றின் உடம்பு சிறிது விரிந்த அளவில் வளரும் எனவும் இதனால் ஆடுகள் நான்கிலிருந்து ஐந்து குட்டிகள் வரை ஈன்றும் தன்மை கிடைக்கும் எனவும் மேலும் அதிக அளவு பாலும் குட்டிகளுக்கு கிடைக்கும் எனவும் திரு அருண் அவர்கள் கூறுகிறார்.

பொதுவாக ஆடுகள் நீளமாகவும், அகலமாகவும் இருந்தால் மட்டுமே அவைகள் நல்ல ஆடுகள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த எண்ணம் மிகவும் தவறானது எனவும் கூறுகிறார்.

காரணம் ஆடுகள் என்பது நல்ல உடல் அமைப்பையும், சரியான காம்பு அமைப்பையும் வைத்திருந்தாலே அவைகள் நல்ல ஆடுகளாகவும், அவைகள் ஈன்றும் குட்டிகள் நல்ல உடல் நலத்துடன் பிறக்கும் என திரு அருண் அவர்கள் கூறுகிறார்.

பொதுவாக ஆடுகள் வளரும்போது அதனுடைய கொம்புகளும் அதன் வளர்ச்சிக்கு ஏற்ப சேர்ந்து வளரும். கொம்புகள் ஆடுகளின் வளர்ச்சிக்கு ஏற்ப வளர்ந்தால் மட்டுமே அவைகள் சரியான உடல் வளர்ச்சியுடன் வளர்கிறது எனவும் கூறுகிறார்.

கொம்புகள் அதி விரைவாக வளர்வதை பார்த்தே ஆடுகள் அவற்றின் வயதுக்கு மீறிய வளர்ச்சியை பெற்றுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம் எனவும் கூறுகிறார். இவ்வாறாக வயதுக்கு மீறிய வளர்ச்சியைஅடையும் ஆடுகளை தேர்ந்தெடுப்பது மிக தவறான ஒன்று எனவும் கூறுகிறார்.

எப்பொழுதும் ஆடுகள் வாங்கும் போது அவற்றின் முகத் தோற்றத்தையும், உருவத் தோற்றத்தையும் பார்த்து ஆடுகளை நிர்ணயித்து விடக்கூடாது, ஆடுகளின் உடல் நலத்தையும் அவற்றின் தரத்தையும் அறிந்து வாங்குவது மிக சிறப்பான ஒன்று எனவும் திரு அருண்அவர்கள் கூறுகிறார்.

சிறு குட்டிகளை வாங்கும்போது அவற்றின் உடல் தோற்றத்தையும், தரத்தையும் அறிந்து வாங்கினால் போதுமானது எனவும் அந்த குட்டிகள் உடல் எடை குறைவாக இருந்தாலும் அதனை நாம் வளர்த்து அதிக எடையை உருவாக்கி கொள்ளலாம் என கூறுகிறார். முக்கியமானது உடல் தோற்றமும் அவற்றின் தரமும் மட்டுமே என கூறுகிறார்.

மேலும் சிறுவயதில் உள்ள குட்டிகளின் கொம்புகள் வளைந்த மாதிரி இருக்கக்கூடாது ஏனெனில் குட்டிகள் வளரவளர கொம்பானது அவற்றின் தலையில் குத்தி ஆபத்து ஏற்பட நேரலாம் எனவும் கூறுகிறார்.

வயதுக்கு ஏற்ப வளர்ச்சி இல்லை என்றால் அந்த ஆடுகளை பண்ணைகளில் வைத்திருப்பதால் எந்தவித லாபமும் இல்லை என திரு அருண் அவர்கள் கூறுகிறார்.

ஆடுகளின் விற்பனை நிலை

திரு அருண் அவர்களின் பண்ணையில் உள்ள அனைத்து ஆடுகளையும் சந்தைகளில் சென்று வாங்கி விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

திரு அருண் அவர்கள் இந்த பண்ணையை தொடங்கும் போது அதிக அளவில் யாரும் இந்த பண்ணை வளர்ப்பில் ஈடுபாடு காட்டவில்லை எனவும், மூன்று மற்றும் நான்கு வருடங்கள் கடுமையான போராட்டத்திற்குப் பிறகே இவர் இந்த அளவிற்கு பண்ணையை சிறப்பாக நடத்தி வருகிறேன் எனவும் திரு அருண் அவர்கள் கூறுகிறார்.

எந்த ஒரு பண்ணையாரும் அவர்களிடம் தழுவி உள்ள ஆடுகளை விற்பனையாளர்களுக்கு அளிப்பதற்கு யோசனை செய்வார்கள் என கூறுகிறார். இதே போலும் இவரும் அவர்களுடைய ஆடுகளை அதாவது முக்கியமாக பெண் ஆடுகளை தருவதற்கு அதிக அளவு யோசனை செய்வதாகவும் கூறுகிறார்.

ஏனெனில் இவரும் ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு வளர்ந்து வரும் பண்ணையாளர் ஆகவே இருந்ததாகக் கூறுகிறார். இவர்களுக்கு மிகவும் நெருக்கமான பண்ணையாளர்களுக்கு மட்டுமே ஆடுகளை அளிப்பதாகவும் கூறுகிறார்.

இவ்வாறான ஆடுகள் மட்டுமே தான் வேண்டுமென்றால் ஒரு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பே பதிவு செய்தால் ஆடுகளை அளிப்பதாகவும் திரு அருண் அவர்கள் கூறுகிறார்.

அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இவர்கள் ஆடுகளை அளித்து வருவதாகவே கூறுகிறார். இந்த முறையை செய்து வருவதாகவும் வரும் காலங்களில் செய்ய இருப்பதாகவும் கூறுகிறார்.

பொதுவாக ஆடுகளின் வாழ்நாள் என்பது 12 வருடங்கள் மட்டுமே ஆகும். இதனால் வளர்ந்த ஆடுகளை வாங்கிச் செல்வதை விட சிறிய குட்டிகளை வாங்கிச் சென்று வளர்த்துவது மிக சரியான ஒன்று எனவும் கூறுகிறார்.

திரு அருண் அவர்களின் பண்ணையில் வாடிக்கையாளர்களை அதிகளவு உள்ளே விடுவதில்லை. இதற்கு காரணம் இவர்களுக்கு நல்ல முறையில் பழக்கம் ஆகும் வரை அனைவரும் இவர்களுக்கு அன்னியர்களே அவர் எனவும் அனைவரையும் உள்ளே விட்டால் கண் திருஷ்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் திரு அருண் அவர்கள் கூறுகிறார்.

வாடிக்கையாளர்கள் உள்ளே வந்து பண்ணையை பார்த்தே ஆக வேண்டும் என்றால் அவர்கள் வருவதற்கு ஒரு நாள் முன்பு கூறிவிட்டால் பண்ணைக்குள் அழைத்துச் சென்று காண்பிப்பதாக திரு அருண் அவர்கள் கூறுகிறார்.

ஆனால் அனைத்து வாடிக்கையாளர்களின் தேவையையும் நல்ல முறையில் பூர்த்தி செய்து வருவதாக திரு அருண் அவர்கள் கூறுகிறார். மேலும் இவர்கள் பண்ணைகளுக்கு ஆடுகள் வாங்க தொலைபேசியில் அழைக்கும் நபர்களுக்கு சரியாக பதிலளிக்க முடியாததால் அதற்காக ஒரு நபரை நியமனம் செய்துள்ளதாகவும், திரு அருண் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவருடைய பண்ணையே இவருடைய தொழிலாளர்களை நம்பியே உள்ளது எனவும் கூறுகிறார். மேலும் இவர் தொலைபேசியில் வரும் அழைப்புகளை அதிக அளவு பதில் அளிக்க முடியாத காரணமானது இவருக்கு தனிப்பட்ட கடமைகள் அதிகமாக உள்ளது எனவும் கூறுகிறார்.

இவருடைய பண்ணையில் ஆடுகளை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு பிடித்த எந்த வகை ஆடுகளையும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறுகிறார். மேலும் ஒரு பண்ணை வைத்து நடத்தும் போது அவை ஐந்து வருடங்களுக்குப் பிறகே பண்ணையை பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள முடியும் எனவும் திரு அருண் அவர்கள் கூறுகிறார்.

ஆடுகளை ஒரு பண்ணையில் இருந்து மற்றொரு பண்ணைக்கு மாற்றும் போது செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள்

ஒரு பண்ணையில் இருந்து மற்றொரு பண்ணைக்கு ஆடுகளை எடுத்துச் சொல்லும்போது ஆடுகளை மிக பாதுகாப்பான வகையில் கொண்டு செல்வது மிகவும் அவசியமான ஒன்று என திரு அருண் அவர்கள் கூறுகிறார்.

ஆடுகளை வண்டிகளில் எடுத்து செல்லும் போது ஆடுகள் நிற்கும்போது வழுக்கி கீழே விழாமல் இருக்க வண்டிகளில் வைக்கோல் அல்லது தேங்காய் நார்களை போட்டு ஆடுகளை அதன் மேல் நிற்கச் செய்து ஆடுகளை எடுத்து செல்வது மிகச் சிறப்பான ஒன்று எனவும் கூறுகிறார்.

பயண நேரங்களில் ஆடுகள் 12 மணி நேரத்தில் இருந்து 13 மணி நேரம் வரை உணவு மற்றும் நீர் இல்லாமல் எந்த பாதிப்பும் இன்றி பண்ணைகளுக்கு செல்லும் எனவும் கூறுகிறார். வெயில் காலங்களில் மட்டும் ஆடுகளை மாலை நேரங்களில் மற்றொரு பண்ணைக்கு அழைத்துச் செல்வது சிறப்பான ஒன்று எனவும் கூறுகிறார்.

ஆடுகளுக்கு வெயில் படாமல் இருக்க வண்டிகளின் மேல் கூண்டு போன்ற அமைப்பை உருவாக்கி கொள்வது இன்னும் சிறப்பான ஒன்று எனவும் கூறுகிறார். ஆடுகள் பண்ணைகளுக்கு சென்று இறங்கியதற்கு பிறகு சிறிது அளவு வெதுவெதுப்பான தண்ணீரை அளிக்க வேண்டும் எனவும் திரு அருண் அவர்கள் கூறுகிறார்.

பண்ணைகளுக்கு எடுத்துச் செல்லும்போது அந்த வண்டியில் உள்ள வளர்ந்த ஆடுகளை கயிறை கொண்டு கட்டிவிட வேண்டும் எனவும் கூறுகிறார். ஏனெனில் ஆடுகளை கட்டாமல் விட்டால் அவைகள் சிறிய குட்டிகளை தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறுகிறார்.

வண்டிகளில் இருந்து ஆடுகள் கீழே விழாமல் இருக்க ஒரு தடுப்பு போன்ற அமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். காலையில் ஆடுகள் வேறு பண்ணைக்கு செல்கிறது என்றால் இரவில் அந்த ஆடுகளுக்கு வெதுவெதுப்பான நீரை மட்டும் அளித்துவிட்டு காலையில் சாதாரணமாக பசுந்தீவனங்களை அளிக்கலாம் எனவும் திரு அருண் அவர்கள் கூறுகிறார்.

மேலும் ஆடுகளை வாங்கிச் செல்லும் பண்ணையாளர்களுக்கு இவரிடம் உள்ள தடுப்பூசிகளையும் அளிப்பதாகவும் கூறுகிறார். அந்த தடுப்பூசி வகைகளை மிகவும் பாதுகாப்பான அமைப்பிலேயே அனுப்பி வைப்பதாக திரு அருண் அவர்கள் கூறுகிறார்.

மேலும் ஆடுகளை வாங்கி செல்லும் வாடிக்கையாளர்களுக்கு ஆடுகள் வளர்க்கும் வழிமுறைகளை பற்றியும் கூறி விடுவதாகவும் கூறுகிறார். இந்த வழிமுறைகள் ஆனது இவருடைய மருத்துவரின் ஆலோசனைகளே ஆகும் எனவும் திரு அருண் அவர்கள் கூறுகிறார்.

தலைச்சேரி ஆடுகள் விற்பனையாகும் இடம்

திரு அருண் அவர்களின் பண்ணையிலிருந்து மற்றொரு பண்ணைக்கு ஆடுகளை வாங்கி செல்லும் வாடிக்கையாளர்களை பற்றியும் அவர்களிடம் நேரடியாக சென்றும் அந்த ஆடுகள் எவ்வாறு நல்ல முறையில் வளர்கிறது என்பதை பற்றியும் மிக விளக்கமாக கூறியுள்ளார்.

இவரிடம் வாங்கிச் சென்ற பண்ணையாளர்கள் அவர்களிடம் உள்ள அனைத்து ஆடுகளும் நல்ல முறையில் வளர்ந்தும் நல்ல குட்டிகளை ஈன்று வருவதாகவும் அந்த பண்ணையாளர்கள் அனைவரும் கூறுகின்றனர்.

திரு அருண் அவர்கள் வாடிக்கையாளர்களின் ஊரில் தலைச்சேரி ஆடுகளுக்கு வரவேற்பு இல்லை என்றால் அவர்களது ஊரில் எந்த ஆடுகளுக்கு அதிக அளவு வரவேற்பு உள்ளதோ அந்த ஆடுகளை வளர்த்துவது மிகச் சிறப்பான ஒன்று என கூறுகிறார்.

திரு அருண் அவர்கள் தலைச்சேரி ஆட்டுப்பண்ணை வளர்ப்பினை கடந்த பத்து வருடங்களாக மிகச் சிறப்பாகவும், அதிக லாபத்தை பெற்றும் வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் படிக்க:தேங்காய்கள் உரிக்க பயன்படும் இயந்திரம்.

Leave a Reply