திரு சிவகுமார் வெங்கடாசலம் அவர்கள் திருப்பூரில் ஒரு காங்கேயம் காளை பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய காங்கேயம் காளை பண்ணையை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.
Mr. Sivakumar venkatachalam their life
திரு சிவகுமார் வெங்கடாசலம் அவர்கள் திருப்பூரில் ஒரு கம்பீரமான காங்கேயம் காளை பண்ணையை சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். மற்றும் இவருடைய பண்ணையை கொங்க கோசாலை முறையில் நடத்தி வருவதாக கூறுகிறார்.இவர் இன்ஜினியரிங் பயின்று விட்டு வெளிநாட்டில் வேலை செய்து வந்ததாக கூறுகிறார்.
இவ்வாறு இவர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இவர் இவருடைய மகன் பிறந்ததும் சொந்த ஊருக்கே திரும்பி வந்து விட்டதாக கூறுகிறார். இவ்வாறு சொந்த ஊருக்கு வந்த பிறகு இவருக்கு நாட்டு மாடுகளின் மீது ஆர்வம் வந்ததாக கூறுகிறார்.
இதில் நாட்டு மாடுகளில் காங்கேயம் காளை வகைகளை வளர்க்கலாம் என்ற எண்ணத்துடன் இந்த காங்கேயம் காளை பண்ணையை தொடங்கியதாக திரு சிவக்குமார் வெங்கடாச்சலம் அவர்கள் கூறுகிறார். மேலும் இவர் நாட்டு மாடுகளைப் பற்றி நல்ல முறையில் அறிந்து கொண்டு தொடங்கியதாக கூறுகிறார்.
மற்றும் இந்த நாட்டு மாடுகள் சில மருத்துவ குணங்களுக்கும் பயன்பட்டு வருவதாக கூறுகிறார். இதன் அடிப்படையாகவே இவர் இந்த காங்கேயம் காளை வகைகளை வளர்த்து அதன் மூலம் பெண் நாட்டு மாடுகளுடன் இனப்பெருக்கம் செய்து பண்ணையை பெரிய அளவில் நடத்தி வருவதாக கூறுகிறார்.
பண்ணையின் தொடக்கம்
திரு சிவக்குமார் வெங்கடாசலம் அவர்கள் இந்த பண்ணையை தொடங்கும் போது மாடுகளை வாங்குவதற்கு இவருடைய நண்பர் ஒருவரின் மகனுடன் ஒட்டன்சத்திரம் சந்தைக்கு சென்றதாக கூறுகிறார். இவ்வாறு இவர் சந்தைக்கு செல்லும் போது அந்த சந்தையில் அதிக அளவில் சீமை மாடுகளே இருந்ததாகக் கூறுகிறார்.
குறைந்த அளவில் மட்டுமே நாட்டு மாடுகள் இருந்ததாக கூறுகிறார். மேலும் சந்தைக்கு வருபவர்களும் சீமை மாடுகளை அதிகளவில் வாங்கி சென்றதாக கூறுகிறார். நாட்டு மாடுகளை இறைச்சிக்காக மட்டுமே வாங்கி சென்று கொண்டிருந்ததாக திரு சிவக்குமார் வெங்கடாசலம் அவர்கள் கூறுகிறார்.
இவ்வாறு இருக்கும் நிலையில் இவை இறைச்சிக்காக செல்லும் மாடுகளில் 3 மாடுகளை அதிக விலை கொடுத்து வாங்கி வந்து வளர்த்ததாக கூறுகிறார். இவ்வாறு இவர் இறைச்சிக்காக செல்லும் மாடுகளை வாங்கியதற்கு காரணம் இந்த வகையில் செல்லும் மாடுகளே மிகவும் உடல் வளத்துடன் இருக்கும் என கூறுகிறார்.
இதில் இளம் காளைகளை தோலுக்காக சிலர் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார். இவ்வாறு நல்ல உடல் வளத்துடன் இருக்கும் மாடுகளே இனப்பெருக்கம் செய்து சரியான நிலையில் உள்ள இளம் கன்றுகளை அளிக்கும் என்ற காரணத்திற்காக இவர் இந்த மாடுகளை வாங்கி வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மற்றும் இவரிடம் மாடுகள் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் மாடுகளை வளர்க்க முடியவில்லை என்றால் அவற்றை வெட்டுவதற்கு அளிக்க வேண்டாம். அதனை மீண்டும் தாமே பெற்றுக் கொள்வதாக கூறி வருவதாக திரு சிவக்குமார் வெங்கடாசலம் அவர்கள் கூறுகின்றார்.
கொங்க கோசாலை
திரு சிவகுமார் வெங்கடாசலம் அவர்கள் இந்த காங்கேயம் காளை பண்ணையை கோசாலை முறையில் நடத்தி வருவதாக கூறுகிறார். இப்பொழுது கோசாலை என்றால் மாடுகளை நிரந்தரமாக வைத்திருக்கும் ஒரு இடம் என்று கூறுகிறார்.
ஆனால் திரு சிவகுமார் வெங்கடாசலம் அவர்கள் இவருடைய கோசாலையில் மாடுகளை நிரந்தரமாக மட்டுமே வைத்திருப்பதாக கூறுகிறார். உதாரணமாக சந்தைகளில் வெட்டுவதற்கு செல்லும் மாடுகளை இவர் தற்காலிகமாக வாங்கி இவருடைய பண்ணையில் வைத்து பிறகு விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
இவ்வாறு இந்த மாடுகளை மற்றொரு குடும்பத்திற்கு செல்லும் வரை மட்டுமே இவர் பாதுகாத்து வைத்துக் கொள்வதாக கூறுகிறார். மேலும் மாடுகள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் அது ஒரு விவசாயிடம் மட்டுமே இருக்க வேண்டும் என கூறுகிறார்.
மேலும் கோசாலை என்ற எடுத்துக் கொண்டால் அது மாடுகளுக்கு அனாதை இல்லம் போன்று என திரு சிவகுமார் வெங்கடாசலம் அவர்கள் கூறுகிறார். கோசாலையில் மாடுகள் இருந்தால் அவற்றைத் தனித்தனி முறையில் கவனிக்க முடியாது. ஆனால் ஒரு விவசாயியிடம் ஒரு மாடு இருந்தால் அவர் அந்த மாட்டை மிகவும் கவனமாக கவனித்து கொள்ளமுடியும் கூறுகிறார்.
Method of rescuing cows
இன்றுள்ள நிலையில் நாட்டு மாடுகள் அனைத்தும் அதிக அளவில் இறைச்சிக்காக மட்டுமே விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு இறைச்சிக்காக செல்லும் மாடுகளை திரு சிவகுமார் வெங்கடாசலம் அவர்கள் மீட்டு இவருடைய கோசாலையில் வளர்த்து வருவதாக கூறுகிறார்.
இவ்வாறு இவர் முதன்முதலில் மாடுகளை மீட்ட சந்தை ஒட்டன்சத்திரம் சந்தை எனக் கூறுகிறார். மேலும் திருப்பூர் சந்தைகளில் மாடுகளை மீட்டு வாங்கி வருவதாக கூறுகிறார். இந்த திருப்பூர் சந்தைகளில் அதிக அளவு மாடுகள் இறைச்சிக்காக மட்டுமே விற்பனையாகி வருவதாக கூறுகிறார்.
மேலும் குண்டடம் சந்தைகளிலும் மாடுகளை வாங்கி வருவதாக கூறுகிறார். மற்றும் இவ்வாறு மாடுகளை வாங்க செல்லும் போது நாட்டு மாடுகளின் மீது ஆர்வம் உள்ள இளைஞர்களை அழைத்துக்கொண்டு ஒரு குழுவாக சென்று மாடுகளை வாங்கி வருவதாக திரு சிவகுமார் வெங்கடாசலம் அவர்கள் கூறுகிறார்.
மற்றும் இன்றுள்ள இளைஞர்கள் நாட்டு மாடுகளை காக்க வேண்டும் என்று அதிகளவு எண்ணத்தைக் கொண்டு இருப்பதாகவும் கூறுகிறார். இவ்வாறு நாட்டு மாடுகளை காக்கும் எண்ணம் உள்ள இளைஞர்களை இவர் தேர்ந்தெடுத்து ஒரு குழுவாக அமைத்து உள்ளதாக கூறுகிறார்.
மேலும் இந்த நாட்டு மாடுகள் விற்பனை முறையை இணையதளங்களில் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார். மேலும் இந்த நாட்டு மாடுகளில் வரும் பாலினை வெளியில் விற்பனை செய்ய முடியாது எனக் கூறுகிறார். நம்முடைய வீட்டுத் தேவைக்கான பாலை மட்டுமே இந்த நாட்டு மாடுகள் அளிக்கும் எனவும் கூறுகிறார்.
ஆனால் இந்த நாட்டு மாடுகளின் பால் மிகவும் சிறப்பானது எனக் கூறுகிறார். இவற்றின் பால்களை மருத்துவ குணத்திற்கு பயன்படுத்த முடியும் என கூறுகிறார். மேலும் ஒரு மாட்டிலிருந்து அதிகளவு பால் கிடைக்கிறது என்றால் அந்த மாடு நல்ல மாடு என்று அர்த்தமில்லை எனவும் கூறுகிறார்.
எந்த மாடு அளவான முறையில் பாலை அளிக்கிறதோ அந்த மாட்டின் பால் அதிக அளவு வீரியத்தை கொண்டிருக்கும் என கூறுகிறார். மேலும் மாடுகள் அதிக அளவு வெட்டுவதற்கு விற்பனை ஆவதற்கு காரணம் மாட்டில் ஒரு சுழி இருக்கும் எனக் கூறுகிறார்.
இதனால் இந்த சுழி இருப்பதால் மாடு வைத்துள்ளவர்கள் மாடுகளை வெட்டுவதற்கு விற்பனை செய்து விடுவதாக கூறுகிறார்.மேலும் கர்ப்பம் தரிக்காத மாடுகளையும் அதிக அளவில் இறைச்சிக்காக விற்பனை செய்து விடுவதாக திரு சிவக்குமார் வெங்கடாசலம் அவர்கள் கூறுகிறார்.
மற்றும் இவர் மாடுகளை வாங்கும் போது மருத்துவரின் ஆலோசனையுடன் மாடுகளை வாங்குவதாக திரு சிவக்குமார் வெங்கடாசலம் அவர்கள் கூறுகிறார்.
கோசாலை வளர்ப்பில் கிடைக்கும் வருமானம்
திரு சிவகுமார் வெங்கடாசலம் அவர்கள் இவருடைய மாடுகளிலிருந்து கிடைக்கும் சாணத்தினை வறட்டியாக செய்து அவற்றை அடுப்பில் போட்டு அதனை விபூதியாக செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
மற்றும் மாடுகளிலிருந்து வரும் சாணி குப்பைகளை உரமாக பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார். மேலும் இந்த சாணி உரங்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் விபூதி வேண்டும் என்று ஏதாவது பண்ணையிலுள்ள பண்ணையாளர்கள் அவருடைய சாணத்தினை இவரிடம் கொடுத்து விபூதி வேண்டும் என்று கூறினால் அவர்களுக்கு அளித்து வருவதாக கூறுகிறார்.
மேலும் மாடுகளின் சிறுநீர்களிலிருந்து ஹர்க் மற்றும் மாட்டுச் சாணத்திலிருந்து சோப்பு மற்றும் ஷாம்பு ஆகியவற்றை தயார் செய்யலாம் என கூறுகிறார். ஆனால் இவர் அதிக அளவில் இந்த மாட்டுச் சாணத்தின் மூலம் விபூதி உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
இந்த விபூதி விற்பனையில் இவருக்கு அதிக அளவு லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார். மேலும் இந்த கோசாலை வளர்ப்பு முறை மிகவும் கடினமான ஒரு முறை எனவும் கூறுகிறார். திரு சிவகுமார் வெங்கடாசலம் அவர்கள் இந்த காங்கேயம் காளை வளர்ப்பு முறையை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார்.
மேலும் படிக்க:பல வேலைகளுக்குப் பயன்படும் ஒரே இயந்திரம்.