ஆட்டோ பிரின்ட் என்னும் ஒரு தனியார் இயந்திர நிறுவனம், பல வேலைகளை செய்ய பயன்படும் ஒரு சிறப்பான இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர். இந்த இயந்திர நிறுவனத்தைப் பற்றியும், பல வேலைகளை செய்ய பயன்படும் ஒரே இயந்திரத்தை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
ஆட்டோ பிரின்ட் நிறுவனத்தின் தொடக்கம்
ஆட்டோ பிரின்ட் என்னும் இந்த தனியார் நிறுவனம் 25 வருடங்களாக செயல்பட்டு வருவதாக இந்த நிறுவனத்தின் இயந்திர தயாரிப்பு நிபுணர் திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.
இந்த நிறுவனமானது 1993 ல் தொடங்கியதாக கூறுகிறார். இவர்கள் இந்த நிறுவனத்தை முதலில் தொடங்கும் போது அச்சிடும் தொழிலையே செய்து வந்ததாக கூறுகிறார். அதன் பிறகு இயந்திரங்களை தயாரித்து அதனை நல்ல முறையில் விற்பனை செய்து அதன் மூலம் அதிக லாபத்தை பெற்று வந்ததாக கூறுகிறார்.
மேலும் இவர்களுடைய இயந்திரம் நிறுவனமானது மக்களிடையேயும் அதிகளவு வரவேற்ப்பை பெற்று வந்ததாகவும் திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.
மேலும் தற்போது இந்த இயந்திர நிறுவனமானது 52 நாடுகளுக்கு இயந்திரங்களை தயார் செய்து ஏற்றுமதி செய்து வருவதாக கூறுகிறார். மற்றும் 14,000 இயந்திரங்களுக்கு மேல் உருவாக்கி உள்ளதாகவும் கூறுகின்றார்.
மற்றும் இந்த ஆட்டோ பிரின்ட் நிறுவனமானது வெளிநாடுகளுக்கு இயந்திரங்களை அனுப்பக்கூடிய ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் என திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார். மற்றும் இப்பொழுது வேளாண் துறைக்காக இயந்திரங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு இந்த பல வேலைகளுக்குப் பயன்படும் ஒரு இயந்திரத்தை உருவாக்கி உள்ளதாக கூறுகிறார்.
Autoprint multipurpose power weeder
பல வேலைகளை செய்ய பயன்படும் இந்த ஒரே இயந்திரம் மிகவும் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார்.
மேலும் இந்த ஆட்டோ பிரின்ட் நிறுவனமானது இந்த இயந்திரத்தை உருவாக்குவதற்கு ஒரு இத்தாலிய நிறுவனத்துடன் கூட்டு வைத்து உருவாக்கி வருவதாக கூறுகிறார். இந்த இத்தாலிய நிறுவனமானது 40 ஆண்டுகளாக இந்தத் துறையில் வல்லுனர்களாக இருந்து வருவதாக திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.
இந்த இத்தாலிய நிறுவனத்தின் கண்டுபிடிப்புகள் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இவர்களுடன் சேர்ந்து இந்த இயந்திரத்தை உருவாக்கி வருவதாக கூறுகிறார்.
மேலும் இந்த இயந்திரங்களில் இரண்டு வகைகளை உருவாக்கி உள்ளதாக கூறுகிறார். அவைகள் டெரா வெய்ட் மற்றும் டெரா டென் ஆகிய இரண்டு இயந்திர வகைகளை உருவாக்கி உள்ளதாக திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.
இயந்திரத்தின் அமைப்பு மற்றும் செயல்படும் திறன்
இந்த பல வேலைகளை செய்ய பயன்படும் ஒரே இயந்திரத்தை, இரண்டு வகைகளாக உருவாக்கி உள்ளதாக திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார். அவைகள் டெரா வெய்ட் மற்றும் டெரா டென் எனக் கூறுகிறார்.
டெரா டென் வகை இயந்திரமானது 3 அடி அகலம் உள்ள இயந்திரம் என கூறுகிறார். மற்றும் டெரா வெய்ட் இயந்திரமானது ஒன்றரை அடி அகலமுள்ள இயந்திரம் என கூறுகிறார். மேலும் இந்த இரண்டு இயந்திரங்களில் நம்முடைய இடத்திற்கு தகுந்த அளவில் எந்த இயந்திரமும் உள்ளதோ அந்த இயந்திரங்களை வாங்கிக் கொள்ளலாம் என கூறுகிறார்.
மற்றும் டெரா டென் இயந்திரத்தை 3 அடியில் இருந்து இரண்டு அடி ஆக மாற்றிக்கொள்ளலாம் என கூறுகிறார். ஆனால் டெரா வெய்ட் இயந்திரம் ஒன்றரை அடியிலேயே பொருத்தி உள்ளதாக கூறுகிறார்.
இந்த டெரா டென் இயந்திரம் ஆனது மஞ்சி மண்டிகளில் பயன்படுவதாக கூறுகிறார். மேலும் இந்த மண்டிகளில் ஆட்களை வைத்து வேலை செய்தால் பத்து வேலை ஆட்கள் தேவைப்படும் எனவும் கூறுகிறார். ஆனால் இந்த இயந்திரத்தை கொண்டு வேலை செய்தால் இரண்டு மணி நேரத்தில் ஒரு ஆளை வைத்து வேலையை செய்து முடித்துவிடலாம் என கூறுகிறார்.
மேலும் இந்த இயந்திரத்தில் ஹோண்டா இஞ்ஜினை பயன்படுத்தியுள்ளதாக கூறுகிறார். மேலும் இந்த வகை இன்ஜினை பயன்படுத்தி இருப்பது இயந்திரத்திற்கு மிகவும் நன்மை என கூறுகிறார். மற்றும் இந்த இயந்திரமானது செடிகளின் இடையிலுள்ள களைகளை எடுப்பதற்கு பயன்படுத்தலாம் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த இயந்திரத்தில் மூன்று வகை கீர்களை பொருத்தி உள்ளதாக கூறுகிறார்.இதனால் இயந்திரம் வேகமாக செயல்படும் எனவும் கூறுகிறார். இவருடைய நிறுவனமே இந்த முறையில் இயந்திரத்தை உருவாக்கி உள்ளதாகவும் கூறுகிறார்.
மேலும் இந்த இயந்திரம் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் களையை எடுத்து விடும் என கூறுகிறார்.ஆனால் வேலையாட்களின் மூலம் களை எடுக்கும் போது ஆறிலிருந்து ஏழு மணி நேரம் வரை செலவாகும் எனக் கூறுகிறார்.
மேலும் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தும் போது செலவுகளும் குறைவாக இருக்கும் என திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார். மேலும் டெரா வெய்ட் இயந்திரத்தை அனைத்து வகை புல்கள் மற்றும் செடிகளை அறுப்பதற்கு பயன்படுத்த முடியும் என கூறுகிறார்.
Methods of Using the machine
இந்த டெரா டென் இயந்திரத்தை குச்சி கிழங்கு மற்றும் தக்காளி போன்று வரிசையாக பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறுகிறார்.பரவலாக பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு இந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியாது எனவும் கூறுகிறார்.
மற்றும் செடிகள் ஆனது 2 1/4 அகல இடைவெளியில் இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.மற்றும் இந்த இயந்திரத்தின் ஆயுட்காலம் அதிக ஆண்டுகள் இருக்கும் எனவும் கூறுகிறார்.மற்றும் இந்த இயந்திரத்தை இயக்கும் போது அதிர்வுகள் ஏற்படாது எனவும் கூறுகிறார்.
மற்றும் இந்த இயந்திரத்தை சுலபமான முறையில் இயக்க முடியும் எனவும் கூறுகிறார்.இந்த இயந்திரத்தை செயல்படுத்துபவர்களுக்கு எந்தவித உடல் சோர்வு ஏற்படாது எனவும் கூறுகிறார்.
மற்றும் இந்த இயந்திரத்தினால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறுகிறார்.மற்றும் இந்த இயந்திரத்தை அனைத்து வகை வயதில் இருப்பவர்களும் உபயோகிக்க முடியும் என கூறுகிறார். மற்றும் இந்த இயந்திரத்தில் உள்ள அனைத்து பாகங்களையும் மிக சுலபமான முறையில் நீக்கி மீண்டும் பொருத்திக் கொள்ளலாம் என கூறுகிறார்.
மற்றும் டெரா வெய்ட் இயந்திரத்தை அனைத்து வகை புல்கள் மற்றும் செடிகளை வெட்டுவதற்கு பயன்படுத்த முடியும் என கூறுகிறார். மேலும் இந்த இயந்திரத்தை கொண்டு எவ்வளவு பெரிய புதர்களையும் வெட்டி விட முடியும் என கூறுகிறார்.
மேலும் இந்த இயந்திரத்தில் பூச்செடிகளுக்கு நீரை தெளிக்கும் ஒரு முறையையும் அமைத்துள்ளதாக திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.மேலும் இந்த இயந்திரத்தின் மூலமும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என கூறுகிறார்.
இயந்திரத்தை பராமரிக்கும் முறை
இந்த பல வேலைகளை செய்ய பயன்படும் இயந்திரத்தை செயல்படுத்தும் முறை எவ்வளவு முக்கியமானதோ அதேபோல் இதனை தூய்மையாக வைத்துக் கொள்ளும் முறையும் முக்கியமான ஒரு செயல்முறை என திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.
இந்த இயந்திரத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் முறை மிகவும் முக்கியமான ஒன்று என கூறுகிறார். மற்றும் காற்று வடி கட்டிகளை வாரத்திற்கு ஒரு முறை தூய்மை செய்து கொள்ளலாம் என திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.
மற்றும் இந்த இயந்திரத்தின் மூலம் எந்த விதத்திலும் அதிக அளவு செலவு ஏற்படாது எனவும் கூறுகிறார்.மேலும் இந்த இயந்திரத்தை தூய்மை செய்யும் முறை மிகவும் சுலபமான ஒரு முறை என கூறுகிறார்.இயந்திரத்தை சுலபமான முறையில் நீக்கி சுத்தம் செய்து விட்டு அதனை பொருத்திக் கொள்ள முடியும் என கூறுகிறார்.
மற்றும் இந்த இயந்திரத்தில் உள்ள இன்ஜின் மற்றும் கீர் பாக்ஸை 100 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறுகிறார்.முதல் முதலாக இயந்திரத்தைப் பயன்படுத்தும் போது இன்ஜின் ஆயிலை 50 மணி நேரத்திற்குள் மாற்றிவிட வேண்டும் என கூறுகிறார்.
மற்றும் இந்த இயந்திரத்தை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார். இந்த இரண்டு வகை இயந்திரங்களுக்கும் ஆறு மாத காலம் உத்தரவாதம் அளித்து வருவதாக கூறுகிறார்.மேலும் இயந்திரத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலும் இவருடைய நிறுவனம் அந்த பாதிப்பை சரி செய்து அளித்து வருவதாகவும் கூறுகிறார்.
ஆட்டோ பிரின்ட என்னும் இந்த இயந்திரத்தை உருவாக்கும் நிறுவனமானது மிகவும் சிறப்பான முறையில் இந்த இயந்திரங்கள் அனைத்தையும் உருவாக்கி அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருவதாக இந்த இயந்திர நிறுவனத்தின் இயந்திர தயாரிப்பு நிபுணர் திரு சைலந்தர் அவர்கள் கூறுகிறார்.
மேலும் படிக்க:கோழிகளின் தீவனப்பயிர் உற்பத்தியில் சிறந்த லாபம்.