திரு கோவிந்தராஜ் அவர்கள் கோயம்புத்தூரில் ஒரு கம்பி வேலி தயாரிக்கும் நிறுவனத்தை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகின்றார். இவரைப் பற்றியும் இவருடைய கம்பிவேலி நிறுவனத்தின் தயாரிப்பு முறைகளை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
தரமான கம்பி வேலி நிறுவனம்
கோயம்புத்தூரில் திரு கோவிந்தராஜ் அவர்கள் ஒரு கம்பி வேலி தயாரிக்கும் நிறுவனத்தை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவர் இந்த கம்பி வேலி நிறுவனத்தை 15 வருடங்களாக நடத்தி வருவதாக கூறுகிறார்.
மேலும் இவருடைய அனைத்து நிறுவனத்தையும் இவருடைய மகன்கள் பார்த்துக் கொள்வதாக கூறுகிறார். இதில் முக்கியமாக இவருடைய முதல் மகன் அரவிந்தன் அவர்கள் இந்த நிறுவனத்தை முழுமையாக பொறுப்பு எடுத்து கொண்டு கவனித்து வருவதாக திரு கோவிந்தராஜ் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இவர்கள் இந்த கம்பி வேலிகளை மூன்று பகுதிகளாக பிரித்து இருப்பதாக கூறுகிறார். சாதாரணமான வேலிகளை ஒரு பகுதியாகவும், காட்டுப்பன்றிகள் வராமல் இருப்பதற்கு ஒரு வேலியை தயாரித்து அதனை ஒரு தனி பகுதியாகவும், மேலும் கம்பி வேலிகளை ஒரு தனி பகுதியாகவும் பிரித்து அவற்றை விற்பனை செய்து வருவதாக கூறுகின்றார்.
மேலும் இப்பொழுது இந்த கம்பிவேலி நிறுவனத்தை திரு அரவிந்தன் அவர்களும் அவருடைய தம்பியும் கவனித்துக் கொண்டு வருவதாக கூறுகின்றார். இந்த கம்பி வேலிகளை ஒரு அடியில் இருந்து 15 அடி வரை தயாரித்து கொடுத்து வருவதாக திரு அரவிந்தன் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இந்த பன்றிகள் வராமல் தடுப்பதற்கு பயன்படும் வேலைகளை இவருடைய நிறுவனமே முதன்முதலில் அறிவித்ததாக கூறுகின்றார். மற்றும் முள்கம்பி விற்பனையை மொத்த விற்பனையாக செய்துவருவதாக கூறுகின்றார்.
Method of manufacturing wire fences
திரு அரவிந்தன் அவர்களுடைய நிறுவனத்தில் கம்பி வேலிகளை மிகவும் சிறப்பான முறையில் உற்பத்தி செய்து வருகின்றனர். இவர்களுடைய நிறுவனத்தில் வாடிக்கையாளர் கேட்கும் அளவுகளில் கம்பி வேலிகளை தயார் செய்து அளித்து வருவதாக கூறுகின்றார்.
மேலும் இந்த கம்பி வேலிகளை தயார் செய்வதற்கு ஆட்டோமேட்டிக் இயந்திரத்தை முதலில் தெற்கு தமிழ்நாட்டில் இவர்களுடைய நிறுவனமே அறிமுகம் செய்ததாக திரு அரவிந்தன் அவர்கள் கூறுகிறார். மற்றும் இவர்கள் தயார் செய்யும் கம்பி வேலிகளில் எந்தவித கலப்படமும் செய்வதில்லை எனவும் கூறுகிறார்.
ஆனால் இந்த கம்பி வேலிகளை கைகளால் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் கலப்படம் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக கூறுகிறார். இவ்வாறு கலப்படம் செய்வதால் கம்பி வேலிகள் ஆனது விரைவில் பாதிப்பு அடைந்து விடும் என திரு அரவிந்தன் அவர்கள் கூறுகிறார்.
ஆனால் இவருடைய நிறுவனத்தில் இவ்வாறு எந்தவித கலப்படமும் செய்வதில்லை என கூறுகிறார்.
கம்பி வேலிகளின் அளவுகள்
திரு அரவிந்தன் அவர்கள் கோழிப் பண்ணைகளுக்கு உற்பத்தி செய்யப்படும் இயந்திரங்களில் ஒரு அங்குலம், 1 1/4 அங்குலம், ஒன்றரை அங்குலம் ஆகிய அளவுகளில் உற்பத்தி செய்து வருவதாக கூறுகிறார். மற்றும் வாடிக்கையாளர்கள் தேவையான அளவுகளில் கம்பி வேலியை பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.
மேலும் கம்பி வேலிகள் எவ்வளவு அடர்த்தியாக உள்ளதோ அந்த அளவிற்கு நீண்ட காலம் பயன்படுத்த முடியும் என கூறுகிறார். கோழிப் பண்ணைகளுக்கு இவர்கள் மாதம் ஒரு டன் கம்பி வேலிகளை உற்பத்தி செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இந்த கம்பி வேலிகளை 10 வருடங்கள் வரை பயன்படுத்த முடியும் என கூறுகிறார். மேலும் பண்ணைகளுக்கு இந்தக் கம்பி வேலிகள் மிகவும் முக்கியமான ஒன்று என திரு அரவிந்தன் அவர்கள் கூறுகிறார்.
கோழி பண்ணைகளில் 1 1/4 அங்குலம் அளவுள்ள கம்பி வேலியை பயன்படுத்தலாம் என கூறுகிறார். மேலும் இவர்கள் ஒரு அங்குலம் அளவுள்ள கம்பி வேலிகளை தயாரித்து உள்ளதால், இந்த கம்பி வேலிகளை பண்ணைகளில் பயன்படுத்தும் போது காடைகள் மற்றும் சிறு கோழி குஞ்சுகள் வெளியில் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை என திரு அரவிந்தன் அவர்கள் கூறுகிறார்.
மற்றும் காட்டுப்பன்றிகள் பண்ணைக்குள் வராமல் தடுக்க உருவாக்கியுள்ள கம்பி வேலிகளை மிகவும் சிறப்பான முறையில் கூர்மையாக உருவாக்கி இருப்பதாக கூறுகிறார். மேலும் இந்த கம்பி வேலிகளை பன்றிகளின் அட்டகாசம் அதிகம் உள்ள இடங்களில் பயன்படுத்துவது மிகவும் சிறப்பான ஒரு வழிமுறை என திரு அரவிந்தன் அவர்கள் கூறுகிறார்.
The importance of wire fences
திரு அரவிந்தன் அவர்கள் நம் வீட்டின் பாதுகாப்பிற்கு பாதுகாப்பு சுவர்கள் எந்த அளவிற்கு முக்கியமோ, அதேபோல் கோழிப் பண்ணைகளுக்கு இந்த கம்பி வேலிகள் மிகவும் முக்கியமான ஒன்று என கூறுகிறார்.
மேலும் இந்த கம்பி வேலிகளை பயன்படுத்துவதால் பறவைகள் மற்றும் விலங்குகள் பண்ணைக்குள் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை என கூறுகிறார். கம்பி வேலிகளை பண்ணைகளுக்கு பயன்படுத்தினால் இந்த வேலிகள் மிகவும் உறுதியாக இருக்கும் எனவும், இதனால் பண்ணையிலுள்ள கோழிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளும் எனவும் திரு அரவிந்தன் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இந்த கம்பி வேலிகளை பண்ணைகளில் பயன்படுத்துவதால் ஆபத்து அளிக்கக்கூடிய விலங்குகளும் மற்றும் திருடர்களும் இந்த பண்ணைக்குள் வருவதை சுலபமாக தடுத்துக் கொள்ளலாம் என கூறுகிறார்.
13 அடி வரை இவர்கள் கம்பி வேலியினை உற்பத்தி செய்து அளித்து வருவதாக கூறுகின்றார். மேலும் இவர்கள் புதியதாக பண்ணை தொடங்கும் பண்ணையாளர்களுக்கு இந்த கம்பி வேலிகளை பற்றி அறிந்து கொள்வதற்கு மிகவும் குறைவான விலையில் கம்பி வேலிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகின்றார்.
இவ்வாறு இவர்கள் இந்த கம்பி வேலிகளை மிகவும் சிறப்பான வகையில் மிக குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான அளவுகளில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாக திரு அரவிந்தன் அவர்கள் கூறுகிறார்.
கம்பி வேலிகளை விற்பனை செய்யும் முறை மற்றும் விலை
திரு அரவிந்தன் அவர்கள் இந்த கம்பி வேலி விற்பனை முறையை நேரடியாகவும், போக்குவரத்து முறையிலும் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் இவர்கள் கம்பி வேலிகளை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார். மற்றும் இவர்கள் வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவுகளில் கம்பி வேலிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாகவும் திரு அரவிந்தன் அவர்கள் கூறுகிறார்.
மேலும் கம்பி வேலிகளை வாங்க விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் இவர்களை தொடர்பு கொண்டால் போக்குவரத்து முறையில் கம்பி வேலிகளை அனுப்புவதாக திரு அரவிந்தன் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இந்த கம்பி வேலிகளை போக்குவரத்து முறையில் அனுப்பும்போது ஒரு கம்பி வேலியின் மேல் மற்றொரு கம்பி வேலி பட்டு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு கம்பி வேலிகளை பேக் செய்யும் போது அதில் சாக்கினை போட்டு பேக் செய்து அனுப்புவதாக திரு அரவிந்தன் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இவர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் கம்பி வேலிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறுகிறார். மேலும் 25 அடியில் கம்பி வேலிகள் வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கேட்டால் அவற்றை முழுவதுமாக தயாரித்து அளித்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர்கள் கம்பி வேலிகளை வாங்கி செல்லும் வாடிக்கையாளர்களின் பண்ணைகளுக்கு சென்று இவர்களே கம்பி வேலிகளை அமைத்து தருவதாகவும் திரு அரவிந்தன் அவர்கள் கூறுகிறார். மேலும் தொலைவில் உள்ள வாடிக்கையாளர்கள் கம்பி வேலிகளை அமைப்பதற்கு சமூக வலைதளங்களில் வீடியோக்களை அனுப்பி உதவி செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மற்றும் இவர் கம்பி வேலிகளை நீளம் மற்றும் அகலத்தை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு விலையில் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார். ஆனால் இவர்களிடம் உள்ள அனைத்து கம்பிவேலிகளும் மிக குறைந்த விலையிலேயே விற்பனை செய்து வருவதாக திரு அரவிந்தன் அவர்கள் கூறுகிறார்.
மேலும் மக்கள் அனைவரும் விலை குறைவாக உள்ளது என எண்ணி மட்டமான தரமுள்ள கம்பி வேலிகளை வாங்கி ஏமாற்றம் அடைந்து விடுகின்றன என கூறுகிறார். இவ்வாறு இல்லாமல் தரமான கம்பி வேலிகளை வாங்கி பண்ணைகளுக்கு பயன்படுத்தலாம் என திரு அரவிந்தன் அவர்கள் கூறுகிறார்.
திரு அரவிந்தன் அவர்கள் மற்றும் இவருடைய தம்பி ஆகியோர் ஒன்றாக இணைந்து இந்த கம்பிவேலி நிறுவனத்தை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க:பட்டதாரிகளின் நாட்டுமாடு பண்ணை.